Published : 18 Feb 2015 10:36 AM
Last Updated : 18 Feb 2015 10:36 AM

சரக்கு மற்றும் சேவை வரி அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான முக்கிய சட்டங்களை மத்திய அரசு அவசரமாக நிறை வேற்றக்கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சட்டப்பேரவை யில் ஆளுநர் கே.ரோசய்யா கூறியதாவது:

பொருட்கள் மற்றும் சேவைகள் வரி முறையின் (ஜி.எஸ்.டி.) முக்கிய அம்சங்களான, சம வருவாய் அளவுக்கான வரிவிகிதங்கள், வருவாய் இழப்பீட்டினை ஈடுசெய்வதற்கான முறை மற்றும் வரி விதிப்புக்கான குறைந்தபட்ச விற்றுமுதல் அளவு போன் றவை குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையிலேயே ஜிஎஸ்டி வரி குறித்த அரசியல மைப்பு சட்டத்திருத்த முன்வடிவை மத்திய அரசு மக்களவையில் கொண்டுவந்துள்ளது.

இந்த நடவடிக்கை, மாநிலங் களின் நிதிநிலை சுயாட்சியை நீண்டகால அடிப்படையில் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நமது கூட்டாட்சி அமைப்பு முறையை யும் பெருமளவு பாதிக்கும். தமிழக அரசு இதுகுறித்த தனது கவலைகளை தெரிவித்ததோடு, ஜிஎஸ்டி வரி குறித்த சட்டத் திருத்தத்துக்கு முன்னதாக ஒரு மித்த கருத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும், இத்தகைய முக்கியமான சட்டங்களை அவசரமாக நிறைவேற்றக் கூடாது எனவும் வலியுறுத்தி யுள்ளது என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x