இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை நீதிமன்றம் மூலம் மீட்க நடவடிக்கை: தமிழக அரசு செலவில் வழக்கறிஞர்கள் நியமனம்

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை நீதிமன்றம் மூலம் மீட்க நடவடிக்கை: தமிழக அரசு செலவில் வழக்கறிஞர்கள் நியமனம்
Updated on
1 min read

இலங்கை அரசின் வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை நீதி மன்றத்தின் மூலம் மீட்பதற்காக வழக்கறிஞர்கள், உதவி இயக்கு நர் மற்றும் ஆய்வாளரை நியமித் துள்ளதாக தமிழக அரசு தெரி வித்துள்ளது.

இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதர் ஒய்.கே.சின் ஹாவுக்குத் தமிழக மீன்வளத் துறை செயலர் டாக்டர் எஸ்.விஜய குமார் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த காலங் களில் இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர் களை விடுதலை செய்யும்போதே அவர்களது படகுகளும் விடுவிக்கப் படும். ஆனால், சமீப காலமாக மீனவர்கள் மட்டும் விடுதலை செய் யப்பட்டனர். அவர்களின் படகு கள் விடுவிக்கப்படவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. தமிழக அரசு உரிய முறையில் மனு செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.

இந்நிலையில், தமிழக மீனவர் களின் படகுகளை சட்டபூர்வமாக விடுவிக்க தமிழக அரசு ஏற்பாடு கள் செய்துள்ளது. இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் அனுப்பிய கடிதத்தில், ‘படகுகளின் உரிமை யாளர்கள் சம்பந்தப்பட்ட நீதி மன்றங்களில் மனு செய்து, படகுகளை விடுவிக்க சட்ட நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து இலங்கை நீதிமன்றங்களில் விண் ணப்பித்து படகுகளைப் பெற, மீனவர்களின் சார்பில் தமிழக அரசு வழக்கறிஞர்களை நியமித் துள்ளது. அவர்களுக்கு சட்ட உதவிகள் செய்வதற்காக தமிழக மீன்வளத்துறையின் ராமேஸ்வரம் உதவி இயக்குநர் மற்றும் மீன் வள ஆய்வாளர் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். வழக்கின் அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும். இந்த நட வடிக்கைக்கு உரிய உதவிகளை இலங்கையில் உள்ள இந்திய தூதர் செய்து தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in