

இஸ்லாமிய மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரை பணிநீக்கம் செய்யவேண்டும் என்று கோரி தமிழக தலைமைச் செயலரிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புகார் அளித்துள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் முஹம்மது சாதிக் தலைமையிலான குழுவினர் நேற்று தமிழக தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியி ருப்பதாவது:
அரசு ஊழியரான உமாசங்கர், இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் குறித்து அவதூறான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார். இஸ்லாமியர் வணங்கும் அல்லாஹ் குறித்து தவறான விளக்கம் அளிக்கிறார். உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி, மத நம்பிக்கையை கொச்சைப்படுத்து கிறார். அனைத்து மதத்தினரையும் சமமாகப் பார்க்கவேண்டிய அரசு ஊழியரான அவரது அவதூறுப் பிரச்சாரம் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள் ளது. எந்த ஒரு மதத்தையும் கொச் சைப்படுத்த இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை. எனவே, அரசு ஊழியரான உமா சங்கரை பணிநீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.