மாரடைப்பு ஏற்படும்போது விரைவாக சிகிச்சை பெற்றால் உயிரிழப்பை தவிர்க்கலாம்: ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை டாக்டர்கள் அறிவுரை

மாரடைப்பு ஏற்படும்போது விரைவாக சிகிச்சை பெற்றால் உயிரிழப்பை தவிர்க்கலாம்: ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை டாக்டர்கள் அறிவுரை
Updated on
1 min read

ஃபோர்டிஸ் மலர் மருத்துவ மனை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குஜராத் நிலநடுக்கத்தில் வீடு இடிந்து விழுந்தபோது கவுரவ் பட்டேல் உயிர் பிழைத் தார். பின் சென்னைக்கு குடி பெயர்ந்தார். 2004-ல் சுனாமி ஏற்பட்டபோது கடற்கரையில் நண்பர்களுடன் இருந்த கவுரவ் மீண்டும் உயிர் பிழைத்தார்.

இந்நிலையில் ஒருநாள் உடல்நலக் குறைவு காரணமாக அடையாறு ஃபோர்டிஸ் மருத் துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அவருக்கு குறைந்த ரத்த அழுத்தமும், மூச்சுத் திணறலும் இருந்தது. ஆஞ்ஜியோ கிராம் பரிசோதனையில் அவரது இடது பிரதான சிரையில் 99 சதவீத அடைப்பு இருப்பது தெரிந்தது. அவருக்கு இதயவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சஞ்சீவ் அகர்வால் தலைமையிலான குழுவினர் பதினைந்தே நிமிடங்களுக்குள் அறுவை சிகிச்சையை செய்தனர்.

அமெரிக்க இதயவியல் கல்லூரி மற்றும் அமெரிக்க இதய சங்கம் ஆகியவை மாரடைப்பு சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளன. அதில் மாரடைப்பு ஏற்பட்ட முதல் 90 நிமிடங்களை தங்க தர நிலை அளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு காரணங்களால் இந்த அளவீடு மீறப்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்படும் ஒவ்வொரு 10 நிமிட தாமதத்தாலும் 1 சதவீத உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைகிறது. இந்த கால அளவு 90 நிமிடங்களை கடந்தால் இந்த விகிதம் இரட்டிப்பாகிறது. தற்போது கவுரவ் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.

அவர் கூறும்போது, “கடவுள் என் மீது அளவற்ற அன்பும், கனிவும் கொண்டுள்ளார். எனக்கு 3-வது முறையாக உயிர்வாழ வாய்ப்பு வழங்கியுள்ளார்” என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in