

மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சித்திரை முழுநிலவு வன்னியர் திருவிழாவில் நேரம் கடந்து பேசியதற்காக தொடரப் பட்ட வழக்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் செங்கல்பட்டு நீதிமன்றத் தில் செவ்வாய்க்கிழமை ஆஜரா னார்.
மாமல்லபுரத்தில் பாமக சார் பில் கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி சித்திரை முழுநிலவு வன்னியர் திருவிழா நடைபெற்றது. இதில் அனுமதிக்கப்பட்ட நேர மான இரவு 10 மணிக்கு மேல் பேசியதாக மாமல்லபுரம் போலீ ஸார் ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருக் கழுகுன்றம் நீதிமன்றத் தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி ராமதாஸ் திருக்கழுகுன்றம் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், 7 வாரம் நேரில் வந்து ஆஜராகி நீதிமன்றத் தில் கையெழுத்திட வேண்டும் என்ற உத்திரவாதத்தின் அடிப்படை யில் ராமதாஸூக்கு ஜாமீன் வழங் கப்பட்டது. இதை எதிர்த்து ராமதாஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம் செங்கல் பட்டு நீதிமன்றத்தில் ஒரு நாள் மட்டும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து செவ்வாய்க் கிழமை நீதிமன்றத்தில் ஆஜ ரான ராமதாஸ், நீதிபதி மகாலட் சுமி முன்னிலையில் கையெழுத் திட்டார். ராம தாஸூடன் கட்சி யின் துணைப் பொதுச்செயலர்கள் பொன்.கங்காதரன், திருக் கச்சூர் ஆறுமுகம், முன்னாள் எம்பி ஏ.கே. மூர்த்தி ஆகியோர் உடன் வந்தி ருந்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: “சிறு சிறு வழக்குகளுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று கையெழுத் திடச் சொல்வது, கடும் நிபந்தனை களின் அடிப்படையில் நீதிமன்றங் கள் ஜாமீன் வழங்குவது ‑வருத் தம் அளிக்கிறது. அதனால் நீதித்துறை சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்” என்றார் அவர்.