பிப்.11 மாலைக்குள் வெளியாட்கள் வெளியேற வேண்டும்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவை உள்ளூர் அரசு கேபிள் சேனலில் பார்க்கலாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

பிப்.11 மாலைக்குள் வெளியாட்கள் வெளியேற வேண்டும்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவை உள்ளூர் அரசு கேபிள் சேனலில் பார்க்கலாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
Updated on
2 min read

நாட்டிலேயே முதன்முறையாக ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவை உள்ளூர் அரசு கேபிள் சேனலில் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

திருச்சிக்கு நேற்று மாலை வந்த அவர், தேர்தல் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இடைத்தேர்தல் பிரச்சாரப் பணிக்கு வந்துள்ள வெளியூர் நபர்கள் பிப்ரவரி 11-ம் தேதி மாலை 6 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். பிப்.13-ம் தேதி வாக்குப்பதிவு நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கென ஏற்கெனவே 3 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அனில்குமார் ஜா சிறப் புப் பார்வையாளராக நியமிக்கப் பட்டுள்ளார். இவர், விரைவில் இங்கு வந்து தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவார். இது தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள வழக்கமான நடவடிக்கையாகும். வேறெந்த காரணமும் இல்லை.

தேர்தல் நடத்தை விதிமுறை களைக் கண்காணிக்க ஏற்கெனவே 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நெருங்கி வருவதால், மேலும் 2 குழுக்கள் அமைக்கப்படும்.

தொகுதியில் அமைக்கப்பட் டுள்ள 322 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முழுவதும் வெப்-கேமரா மூலம் ஆன்-லைனில் பதிவு செய்யப்படும். இதை தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்குச்சாவடி வாரியாக பொதுமக்கள் பார்வையிடலாம்.

மேலும், நாட்டிலேயே முதன் முறையாக வாக்குப்பதிவை உள்ளூர் அரசு கேபிள் சேனலில் பொதுமக்கள் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. ஒரு மணி நேர இடைவெளியில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எத்தனை சதவீத வாக்குகள் பதி வாகியுள்ளன என்பதை ஒளிபரப் பவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இதேபோல, ஒவ்வொரு வாக் குச்சாவடியிலும், வாக்காளிக்க வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் எத்தனை பேர் என்பதையும் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அனைத்து வாக்குச்சாவடி களிலும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதால், வாக்காளர்கள் எவ்வித பயமுமின்றி வாக்குப்பதிவு செய்யலாம்.

வாக்காளர் பட்டியல் புகார்கள் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய்த் துறை அலுவலர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பணி பிப்.11-ம் தேதி நிறைவடையும். இரு இடங்களில் பதிவுகள் இருந்தால், அந்தப் பட்டியல் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு அளிக்கப்படும்.

வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வழங்குவதாக பொது வான புகார்கள் வருகின்றன. பறக்கும் படையினர் அங்கு செல்லும் போது, அதை உறுதிப்படுத்த முடிவதில்லை.

செல்போன் மூலம் புகார் தெரிவிக்கலாம்…

தேர்தல் விதிகளுக்குப் புறம் பாக பணம் கொடுத்தல், பொருட் கள், கூப்பன்கள், மதுபானங் கள் விநியோகித்தல் உள்ளிட்டவை களை வாக்காளர்கள், அரசியல் கட்சியினர் ஆதாரத்துடன் செல்போன் மூலம் புகார் அளிக்க வசதியாக புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு சிட்டிசன் போல் வாட்ச்-2015 (Tamil Nadu Citizen Poll Watch - 2015) என்ற அப்ளிகேஷனை கூகுள் பிளே இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் ஆதாரத்துடன் புகாரை அனுப்பலாம்.

இந்த தகவல் தமிழக தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அலுவலர், தொகுதி தேர்தல் அலுவலருக்கு உடனடியாகக் கிடைக்கும். இதன் மூலம் விரைவான நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in