முதல்வர் தலைமையில் மாநில வனவிலங்கு வாரியம்: தலைவர் உள்ளிட்ட 32 பிரதிநிதிகள் நியமனம்

முதல்வர் தலைமையில் மாநில வனவிலங்கு வாரியம்: தலைவர் உள்ளிட்ட 32 பிரதிநிதிகள் நியமனம்
Updated on: 
1 min read

சென்னை: ​முதல்வர் விஜய்யை தலை​வ​ராகக் கொண்​டு, மாநில வனவிலங்கு வாரி​யத்​துக்கு 32 பிர​தி​நி​தி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். வனவிலங்கு (பாது​காப்​பு) சட்​டம், 1972-ன்​படி மாநில வன விலங்கு வாரி​யம் அமைக்​கப்​படு​கிறது.

இந்த வாரி​யம், வனவிலங்கு பாது​காப்பு மற்​றும் காடு​கள் மேலாண்மை தொடர்​பாக மாநில அரசுக்கு ஆலோ​சனை வழங்​கும்.

இவ்​வாரி​யம், மாநிலத்​தில் தேசி​யப் பூங்​காக்​கள் மற்​றும் வனவிலங்கு சரணால​யங்​களாக அறிவிக்​கப்பட வேண்​டிய பகு​தி​களைத் தேர்ந்​தெடுப்​பது மற்​றும் அவற்​றின் மேலாண்மை குறித்து மாநில அரசுக்கு ஆலோ​சனை வழங்​கும்.

வனவிலங்​கு​கள் மற்​றும் குறிப்​பிட்ட தாவர வகைகளைப் பாது​காப்​ப​தற்​கான கொள்​கைகளை வகுப்​ப​தில் அரசுக்கு வழி​காட்​டு​தல்​களை வழங்​கும். இந்த வாரி​யத்​தின் தலை​வ​ராக அம்​மாநில முதல்​வர் இருப்​பார்.

புதிய ஆட்சி பொறுப்​பேற்​றுள்ள நிலை​யில், தமிழ்​நாடு மாநில வன உயி​ரின வாரி​யத்தை முழு​மை​யாக மறுசீரமைத்து தமிழக மாநில வனவிலங்கு வாரி​யத்​தின் தலை​வ​ராக முதல்​வர் விஜய், துணைத் தலை​வ​ராக வனத்​துறை அமைச்​சர் ரஞ்​சித்​கு​மார் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

சட்​டப்​பேரவை தரப்பு உறுப்​பினர்​களாக எம்​எல்​ஏக்​கள் எம்​.சு​தாகர் (காட்​பாடி), எஸ்​.​கார்த்​தி​கேயன் (மதுரை கிழக்​கு), எம்​.ஆர்​.பல்​லவி (திரு.​வி.க. நகர்) ஆகியோர் உறுப்​பினர்​களாக நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

வனவிலங்கு மற்​றும் இயற்​கைப் பாது​காப்​புப் பணி​களில் ஈடு​பட்​டுள்ள அரசு சாரா அமைப்​பு​கள் தரப்பு உறுப்​பினர்​களாக, நொய்​டாவைச் சேர்ந்த இந்​திய வனவிலங்கு அறக்​கட்​டளை​யின் ஜோஸ் லூயிஸ், மைசூரைச் சேர்ந்த இயற்​கைப் பாது​காப்பு அறக்​கட்​டளை​யின் மூத்த விஞ்​ஞானி டி.ஆர்​.சங்கர ராமன், தஞ்​சாவூரைச் சேர்ந்த ஓம்​கார் அறக்​கட்​டளை​யின் பாலாஜி வேத​ராஜன் ஆகியோர் உறுப்​பினர்​களாக இடம்​பெற்​றுள்​ளனர்.

வனவிலங்கு பாது​காப்​பு, உயி​ரியல், சுற்​றுச்​சூழல் ஆராய்ச்சி உள்​ளிட்ட துறை​களைச் சேர்ந்த வல்​லுநர்​கள் 10 பேரும் உறுப்​பினர்​களாக நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு அரசாணை​யில்​ இடம்​பெற்​றுள்​ளது.

முதல்வர் தலைமையில் மாநில வனவிலங்கு வாரியம்: தலைவர் உள்ளிட்ட 32 பிரதிநிதிகள் நியமனம்
போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்?

X