

கோவையில் பாரம்பரிய தொழி லாக தங்க நகை தயாரிப்பு உள்ளது. சுமார் 700 வியாபாரி கள், 1,500 தங்க நகைத் தயாரிப் பாளர்கள் இந்த தொழிலில் உள்ளனர். மத்திய பட்ஜெட்டில் தங்களுக்குள்ள எதிர்பார்ப்பு கள் குறித்து தங்க நகைத் தயாரிப் பாளர்களும், வியாபாரிகளும் கூறியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த தொழில் முன்னேற்றம் தற்போது இல்லை. தொழில் வளர்ச்சி 30 சதவீதம் குறைந்துவிட்டது. தங்கம் விலை யேற்றத்தால், மத்திய தர குடும் பத்தினர் தங்கத்தில் முதலீடு செய்வதை சுருக்கி, ஸ்மார்ட் போன் வங்குவதில் கவனம் செலுத்துகின்றனர். அவர்கள் ஓர் ஆண்டுக்கு வாங்கும் தங்க நகையை சுருக்கிக் கொண்டால் பெரும் பாதிப்பு ஏற்படும்.
இறக்குமதி வரி விதிப்பு
தங்கத்தின் இறக்குமதி வரியை 10 சதவீதம் கூட்டியது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இறக்குமதி வரியை 5 சதவீதம் குறைத்தால்கூட ஒரு பவுனுக்கு ஆயிரம் ரூபாய் மிஞ்சும். பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வரலாம் என காத்தி ருக்கிறோம். அவ்வாறு இறக்கு மதி வரி குறைந்தால் தங்க நகை விலையும் குறையும், தொழில் முன்னேற்றமும் ஏற்படும் என்கின்றனர்.
கொள்கையில் தெளிவு தேவை
கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பி. முத்து வெங்கட்ராம் கூறுகை யில், ‘தங்கத்தின் மீதான இறக்கு மதி வரியை 2 சதவீதமாக குறைக்க வேண்டும், ஏற்றுமதிக் கட்டுப் பாடுகளை தளர்த்த வேண்டும்.
தங்கத்தின் மீது அரசு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும், அது தொடர்பான தெளிவான விளக்கங்களை அளிக்க வேண்டும். தங்க நகை தயாரிப்பாளர்களுக்கான நீண்ட கால கடன் திட்டத்தை தெளிவாக் காமல் மத்திய அரசு உள்ளது. இதனைக் காரணம் காட்டி, வங்கி கள் வியாபாரிகளுக்கு கடன் தர மறுக்கின்றனர்.
தெளிவான விளக்கம் இல்லாமல் மொத்த தொழிலும் குழப்பத்தில் உள்ளது. உள்நாட்டு சந்தைக்கு தேவையான தங்க இறக்குமதிக்கு தெளிவான வழி முறைகளை ரிசர்வ் வங்கி வழங்க வேண்டும். இதை செய்தாலே தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என்றார்.