Published : 08 Feb 2015 10:55 AM
Last Updated : 08 Feb 2015 10:55 AM

இயக்குநர் சீமான் புதிய இயக்கம் தொடக்கம்: நாம் தமிழர் கட்சிக்கு மாற்றாக புதிய கட்சியா?

நாம் தமிழர் கட்சித் தலைவர் இயக்குநர் சீமான் நேற்று வீரத்தமிழர் முன்னணி என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கினார்.

நாம் தமிழர் கட்சியை 2010-ல் இயக்குநர் சீமான் தொடங்கினார். இந்த கட்சியை, தமிழ்த் தேசிய, ஈழப்போராட்ட ஆதரவு அரசியல் இயக்கமாக நடத்தினார். சமீபத்தில், இந்த கட்சியில் சீமானுக்கு எதிராக கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி உயர்த்தி தனித்து செயல்படப் போவதாகவும், கட்சியில் இருந்து சீமானை நீக்கப்போவதாகவும் அறிவித்தனர்.

இந்நிலையில் நேற்று பழநியில் சீமான் திடீரென்று வீரத்தமிழர் முன்னணி என்ற புதிய இயக்கத்தை தொடங்கினார். ஆனால், இந்த இயக்கம் புதிய அரசியல் கட்சியல்ல என்றும், நாம் தமிழர் கட்சியில் ஒரு இயக்கமாக செயல்படும் என சீமான் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று பழநி யில் கூறியது: கடவுள் நம்பிக்கை உள்ள வர்கள், திருவள்ளுவருடைய நெறி முறைகளை பின்பற்றுகிறவர்கள், அதன்படி வாழ விருப்பப்படுகிறவர் களுக்காக வீர தமிழர் முன்னணி இயக்கத்தை ஆரம்பித்துள்ளோம். வீரத்தமிழர் முன்னணி இயக்கம், திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக இருக்கும். 2016 பொதுத்தேர்தலில் அனைத்து சட்டப்பேரவை தொகுதி களிலும் தனித்து போட்டியிடுவோம்.

இலங்கை தமிழர்களை அந்நாட் டுக்கு திருப்பி அனுப்பும் மத்திய அரசு முடிவு கண்டனத்துக்குரியது. இலங்கைக்கு திருப்பி அனுப்பமாட் டோம் என தமிழக அரசு முடிவு வெடுத் துள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.

நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே சீமான், அந்த கட்சிக்கு மாற்றாக புதிய கட்சி தொடங்கு வதற்காக இந்த புதிய இயக்கத்தை தொடங்கியதாக அரசியல் வட்டாரத் தில் பேசப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x