

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயல்படுவதாக சமூக சேவகர் மேதா பட்கர் குற்றம் சாட்டினார்.
காவிரி டெல்டா மாவட்டங்க ளில் மீத்தேன் எரிவாயு எடுக் கும் திட்டத்துக்கு எதிராக போராட் டங்கள் நடந்து வருகின்றன. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு திரட்டுவதற்காக நேற்று முன்தினம் டெல்டா மாவட்டங்களில் மேதாபட்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சிதம்பரம், நாகை, திருவாரூரில் ஆய்வு மேற் கொண்ட அவர், பின்னர் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற் றத்தில் செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது அவர் கூறியது:
இலங்கையில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் இன்னமும் சிறையில் வாடுகின்றனர். அவர் களது நிலங்கள் பறிக்கப் பட்டுள்ளன. முகாம்களில் உள்ள தமிழர்கள், தங்களது வசிப்பிடங் களுக்குத் திரும்ப முடியாத நிலை உள்ளது. அங்கு புதிய அரசு பொறுப்பேற்றும் பழைய நிலைதான் நீடிக்கிறது.
காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்த அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஓஎன்ஜிசி, கெயில் நிறுவனங்கள் இப்பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலத்தில் துளைபோட்டு இயற்கை எரிவாயு, கச்சா எண் ணெய் எடுப்பதால், நிலத்தடி நீர், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நோயால் இறந்துள் ளனர். பழங்கால நினைவுச் சின்னங்களும் பாதிக்கப்பட்டுள் ளன. எனவே, அங்கிருக்கும் தண்ணீர், மண்ணை ஆய்வுக்கு உட்படுத்த உள்ளோம்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக துளையிட்டு, நிலத் துக்குள் ரசாயனப் பொருட்களைச் செலுத்தி இயற்கை வாயுவை எடுக்கின்றனர். இது நச்சுத்தன்மை வாய்ந்தது. இதனால் தண்ணீர் மாசடைந்துள்ளது.
மீத்தேன் திட்டத்தால் காவிரி டெல்டா பகுதியில் 24 லட்சம் ஏக்கர் நிலம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்பகுதி மக்கள், விவசாயிகள், எதிர்ப்பு இயக் கங்களை ஒன்று திரட்டி எங்களின் மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு போராட்டம் நடத்தும்.
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்களைப் பற்றிக் கவலைப்படாமல் கார்ப் பரேட் நிறுவனங்களுக்குச் சாதக மாகச் செயல்படுகிறது. நிலம் கையகப்படுத்தல் சட்டம் விவ சாயிகளுக்கு எதிரானது. இந்தச் சட்டத்தை எதிர்த்து வரும் 24-ம் தேதி டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் நடத்துகிறோம். இதில் நாடு முழுவதுமிருந்து விவசாய அமைப்புகள், விவசாயிகள் பங்கேற்கின்றனர் என்றார்.
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க நிர்வாகி கள் பேராசிரியர் தா.ஜெயராமன், கே.கே.ஆர்.லெனின், பாரதிசெல்வன், ஜீவானந்தம் உடனிருந்தனர்.