

பொள்ளாச்சி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாணவர் மர்மமாக இறந்தது தொடர்பாக, அந்தச் சிறைக் கண்காணிப்பாளர் உட்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம், ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் பொறி யியல் கல்லூரியில் படித்து வந்த நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புது பட்டியைச் சேர்ந்த பாலுசாமி மகன் கார்த்திகேயன் (21), கடந்த ஜனவரி மாதம் கல்லூரிப் பகுதி யில் நேரிட்ட மோதலில் படுகாய மடைந்து, கோவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு உயிரி ழந்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப் பட்ட 6 மாணவர்களில், 5 பேர் கோவை மத்திய சிறையிலும், கிருஷ்ணகிரி மாவட்டம், கொல்லிகுப்பம் அருகேயுள்ள பெரியபுலியரசு பகுதியைச் சேர்ந்த எம்.வினோத்குமார் (20) என்பவர் மட்டும் பொள்ளாச்சி கிளைச் சிறை யிலும் அடைக்கப்பட்டனர்.
வினோத்குமாரின் தந்தை விரை வுப் படையில் தலைமைக் காவல ராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று காலை உணவருந்திய பிறகு வினோத் குமார், திடீரென மயங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வினோத் குமாரை பரிசோதித்த மருத்து வர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய் துள்ளனர்.
‘வினோத்குமார் மர்மமாக இறந்தது தொடர்பாக பொள் ளாச்சி கிளைச் சிறைக் கண் காணிப்பாளர் அருணாசலம், முதல்நிலைக் காவலர் கிருஷ் ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வினோத் குமார், நேற்று முன்தினம் மாலை முதலே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதுகுறித்து அவர் சிறையில் இருந்தவர்களிடம் தெரி வித்துள்ளார். ஆனால், சிறை அலுவலர்கள் பணியில் அஜாக்கிர தையாக இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. எனவே, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’ என்று கோவை மத்திய சிறைக் கண் காணிப்பாளர் ஆனந்தன் தெரிவித்தார்.