

புதுச்சேரியில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அடையாளம் காணப் பட்டு தலைமறைவாக இருக் கும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 8 போலீஸார் அதிரடி யாக பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளை யத்தில் விபசார கும்பலிடம் இருந்து சிறுமிகள் கடந்த ஏப்ரல் மாதம் மீட்கப்பட்டனர். அவர் களிடம் மேற்கொண்ட விசார ணையில் போலீஸார் சிலரும் அவர்களை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணை நடை பெறுகிறது. வழக்கில் தொடர் புடைய போலீஸாரை அடையாள அணிவகுப்பு நடத்தி கண்டறியுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பேரில் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் சம்பந்தப்பட்ட போலீஸாரை சிறுமிகள் அடையாளம் காட் டினர். இதையடுத்து, நீதி மன்ற உத்தரவின்படி 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 3 சப்இன்ஸ் பெக்டர்கள் உட்பட 9 போலீ ஸார் மீது பாலியல் பலாத் கார வழக்கு பதிவு செய்யப் பட்டு பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர். இதற்கிடையே, அந்த 9 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை இது வரை புதுச்சேரி போலீஸார் கைது செய்யவில்லை. அனை வரையும் தனிப்படை அமைத்து தேடி வருவதாக கூறி வருகின்றனர்.
அந்த 9 பேரில் சப்இன்ஸ் பெக்டர் ராஜாராமன் என்பவர் ஓய்வு பெற்றுவிட்டார். இந்த சூழ்நிலையில், மீதமுள்ள இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், சுந்தர், சப்இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், பாட்சா, ஏட்டுகள் பண்டரிநாதன், குமாரவேல், போலீஸார் செல்வ குமார், சங்கர் ஆகிய 8 பேரை யும் பணி நீக்கம் செய்து ஐஜி பிரவீர் ரஞ்சன் உத்தர விட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய விபசார கும்பலைச் சேர்ந்த புரோக்கர்கள் மட்டுமே இதுவரை கைது செய்யப் பட்டுள்ளனர். 9 போலீஸார் மற்றும் அரசியல் பிரமுகர் கள் சிலர் தொடர்ந்து தலைமறை வாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.