

ரயில்வே பட்ஜெட்டில், ஏழை, நடுத்தர மக்கள் முதல் பெரும் தொழில் அதிபர்கள் வரை அனை வரையும் திருப்திப்படுத்தும் திட்டங்கள் தேவை என்ற கருத்து அனைத்து தரப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
ரயில்வே துறையில் மேற் கொள்ளப்பட்டுள்ள நவீன தொழில் நுட்ப வசதி, உள்கட்டமைப்பு வசதி, புதிய ரயில் போக்குவரத்து வழித்தடம், சரக்கு, பயணிகள் கட்ட ணங்கள் குறைப்பு நடவடிக்கை, ரயில் பெட்டிகளில் தொல்லையற்ற நிம்மதியான பயணம் என பல பிரச்சினைக்கும் பட்ஜெட் மூலம் தீர்வு காணப்படுமா என ஆயிரம் கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன.
சேலம் மாவட்ட அனைத்து வணி கர்கள் சங்கத் தலைவரும், சேலம் ரயில்வே கோட்ட பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஏ.ஜெயசீலன் கூறியது: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல் விலையை குறைத்த மத்திய அரசு, டீசலில் இயங்கும் ரயில் கட்டணத்தை ஏனோ குறைக்க வில்லை. ரயில் நிலையங் களில் உள்கட்டமைப்பு வசதி குறைபாடு மிகுந்துள்ளது. பயணி கள் வந்து செல்ல சுரங்க பாதை, லிஃப்ட் வசதி, எஸ்கலேட்டர், மருத்துவ வசதி என மேம்படுத்த வேண்டிய ரயில் நிலையங்கள் பட்டியல், ரயில் பெட்டியை காட்டிலும் நீண்டு செல்கிறது.
உள்கட்டமைப்புக்கு ஏங்கும் ரயில் நிலையங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த பிறகு, புல்லட் ரயில் விடும் திட்டத்தை கையில் எடுக்கலாம்.
சென்னை -கன்னியாகுமரி இரு வழி இருப்பு பாதை; சென்னை-பெங்களூருக்கு தனி சரக்கு ரயில் போக்குவரத்து; சென்னை - தூத்துக்குடிக்கு தனி சரக்கு ரயில் போக்குவரத்து; புதிய அதிவேக பயணிகள் ரயில்களான சென்னை - கன்னியாகுமரி; கோவை-மதுரை; கோவை-சென்னை; சென்னை-பெங்களூருக்கான ரயில்கள் குறித்த அறிவிப்பு நிறைவேற்றப் படவில்லை.
புறக்கணிப்பு நிரந்தரமாச்சு
ரயில்வே பட்ஜெட்டை பொருத்த வரை வட மாநிலங்களுக்கு வளம் சேர்க்கும் திட்டங்களும், தென்னக மாநிலங்களுக்கு தேவையில்லாத திட்டங்களுமே வந்து சேர்கிறது. இந்த பட்ஜெட்டிலாவது குறைந்த பட்சம் புதிய வழித் தடங்களில் 100 புதிய ரயில்களும், இதில் தமிழகத்துக்கு கூடுதல் புதிய ரயில்களை இயக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
மூத்த குடிமக்கள் ஆதார் அட்டை காண்பித்து கட்டணத்தில் சலுகை பெற வேண்டும் என்கின்ற னர். ஆதார் அட்டை முழுமையாக மக்கள் பெற்றிராத நிலையில், இதனை கட்டாயமாக்க கூடாது.
துறைமுக வழிதடங்களில் புதிய ரயில் திட்டத்தின் தேவை அவசியமாகிறது. தூத்துக்குடி-கடலூர் துறைமுகங்களை இணைக் கவும், கடலூர்-சென்னை துறை முகத்தை இணைக்கவும் வகையிலான புதிய ரயில் திட்டம் கொண்டு வர முடியும். இதனால், வியாபாரிகள் பொருட்களை ரயில் போக்குவரத்து மூலம் கொண்டு வர ஏதுவாக அமையும்.
முன்பதிவு இல்லாத பெட்டியில் 75 பேர் வரை பயணம் செய்யலாம். ஆனால், 200 பேர் வரை பயணம் செய்கின்ற அவலம் உள்ளது. கழிவறை துர்நாற்றத்தை பொருட்படுத்தாமல், அங்கு 10 பேர் நின்று பயணம் செய்யும் மோசமான வேதனை சம்பவம் நடந்து வருகிறது. எனவே, பயணி களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு, முன்பதிவில்லாத பெட்டி களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றார்.