Published : 11 Feb 2015 10:44 AM
Last Updated : 11 Feb 2015 10:44 AM

அழிக்க நினைத்தால் தூக்கத்தில்கூட யானைகள் எதிரியை பழிவாங்கும்: சிந்தனையில் இருக்கும் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுவாரசிய தகவல்கள்

அழிக்க நினைத்தால் தூக்கத்தில்கூட யானைகள் எதிரிகளைப் பழிவாங்கும் சிந்தனையில் இருக்கும் என சங்க இலக்கியத்தில் யானைகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர் தெரிவித்தார்.

யானைகள் இருக்கும் இடம் அனைத்து வளங்களும் நிறைந்த சிறந்த வனப்பகுதியாகும். அத னால் யானைகள் நடமாட்டம் மிகுந்த மேற்கு தொடர்ச்சி மலை இந்தியாவின் சிறந்த வனப்பகுதியாக இருக்கிறது. தமிழகத்தில் இந்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வசிக்கும் யானைகள் சமீப கால மாக வழக்கத்துக்கு மாறாக கூட்டம் கூட்டமாக ஊருக்குள் படை யெடுக்கின்றன. விவசாயப் பயிர் களையும், மனிதர்களையும் துவம்சம் செய்வதால் யானைகள் இன்று மனிதர்களுடைய முக்கிய எதிரியாகி விட்டன. ஆனால், 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் யானைகள் மனிதர் களுடைய நெருங்கிய சிநேகிதனாக வும், கடவுளுக்கு இணையாகவும் மதிக்கப்பட்டதாக சங்க இலக்கி யத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று காந்திகிராமம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் ஓ.முத்தையா தெரி வித்தார்.

கொடைத்திறன், படைத்திறன்

அவர், ‘தி இந்து’விடம் மேலும் கூறியது: ‘‘அந்த காலத்தில் செங்கோல், வெண்கொற்றக்கொடை, முரசம், காவல்மரம், பட்டத்து யானை ஆகியவை ராஜாவுக்கான முக்கிய அடையாளங்களாக இருந்ததை புறநானூறு வழியாக அறிய முடிகிறது. ஒருவன் சிறந்த அரசன் என்பதை அவனுடைய கொடைத் திறன், படைத்திறனை கொண்டே சொல்வார்கள்.

அரசனின் படைகளில் யானைப் படை முக்கியமானது. மலையைத் தாண்டி எதிரிநாட்டுக்கு படை யெடுப்பது எவ்வளவு சிரமமோ, அதுபோல் யானை படையைத் தாண்டி ஒரு நாட்டுக்கு படையெடுப்பது சிரமம். அதனால் எதிரிகளை அழிக்கும் வல்லமை படைத்த யானைக் கும், அரசனைப்போல் சிறப்பான அலங்காரம் செய்வார்கள்.

யானைக்கு பயிற்சிகள்

யானைக்கென்று சில மொழிகள் உள்ளன. அந்த மொழிகளை சொல் லியே யானைகளை மனிதர்கள் பழக்கப்படுத்துகின்றனர். அதில் குறிப்பாக படைக்குரிய யானையாக மாற்ற சில பயிற்சிகளை அளிக் கின்றனர். பனங்குருத்து, இலை தழைகள், பலா, மூங்கில் குருத்துகள், வாழை, தினைப்பயிர்கள் போன்ற வற்றை அவை விரும்பிச் சாப்பிடும். அருவிகளால் அடித்துவரப்படும் கொறுக்கன் தட்டைகளை யானைகள் உண்ணும். பெண் யானை இறந்து விட்டால் அதனுடைய ஜோடி ஆண் யானை சாப்பிடாமல் உடல் மெலிந்துவிடும். யானை தூங்கும் போது பெருமூச்சு விட்டே தூங்கும். பெண் யானையால் தண்ணீர் குடிக்க வர முடியாவிட்டால் ஆண் யானை தும்பிக்கையால் நீரை உறிஞ்சி பெண் யானைக்கு கொண்டுபோய் கொடுக்கும்.

எதிரிகளை தாக்க தயங்காது

கருவுற்று இருக்கிற பெண் யானையால் உணவைத் தேடி வெளியே செல்ல முடியாது. அது போன்ற நேரத்தில் ஆண் யானை உணவுகளை சேகரித்து எடுத்துவந்து ஊட்டும். பெண் யானை மீது ஆண் யானை அந்த அளவுக்கு அன்பு செலுத் தும். ஒருபோதும் யானைகள், தன் இனத்தை (கூட்டத்தை) விட்டுக் கொடுக்காது.

எதிரியை அழிக்கிற வரைக்கும் எண்ணத்தை மறக்காது. எதிரியை அழிக்க நினைத்தால் தூக்கத்தில்கூட அதைப் பற்றிய சிந்தனையில் இருக்கும் என்று புறநானூறில் கூறப் பட்டுள்ளது.

அந்த காலத்தில் கோயில் யானையின் வாயில் இருந்து சிந்தும் உணவை எடுத்துச் சாப்பிட திருமண மாகாத பெண்களும், திருமணமான பெண்களும் போட்டி போடுவார்கள். அதை எடுத்துச் சாப்பிட்டால் திருமண மாகாத பெண்களுக்கு நல்ல கணவர்கள் கிடைப்பார்கள். திருமணமான பெண்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என யானையை கடவுளின் வடிவமாக மக்கள் நினைத்ததாக பரிபாடல் கூறுகிறது. இப்போது யானையை மனிதர்கள் எதிரியாகப் பார்க்கிறார்கள். அந்த காலத்தில் யானையின் வலிமை, ஆற்றலை மக்கள் தெரிந்து வைத்திருந்தனர். அவற்றின் வலிமை யையும், ஆற்றலையும் மக்கள் பயன்படுத்தினர். இப்போது யானையைக் கண்டு மிரண்டு ஓடுகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x