உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கல்லூரியிலிருந்து இடைநின்ற மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு கல்விச் சான்றிதழ்

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கல்லூரியிலிருந்து இடைநின்ற மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு கல்விச் சான்றிதழ்
Updated on
1 min read

கல்லூரியிலிருந்து இடையில் நின்ற மாணவர்களுக்கு உச்ச நீதி மன்ற உத்தரவைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு கல்விச் சான்றிதழ்களை வழங்கியுள்ளது தஞ்சாவூரில் செயல்படும் ஒரு தனியார் கல்வி நிறுவனம்.

தஞ்சாவூர் அருகே செயல்படும் ஒரு பிரபலமான கல்வி நிறுவனத் தில் 2010-ம் ஆண்டில் சேர்ந்த மாணவர்கள் 4 பேர் வேறு கல்லூரிகளில் இடம் கிடைத்ததால், அங்கிருந்து விலகினர். அப்போது அசல் கல்விச் சான்றிதழ் வேண்டுமென்றால் மீதம் உள்ள பருவங்களுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்தவேண்டும் என்றது அந்த கல்வி நிறுவனம்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 4 மாணவர்கள் சார்பில் தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழு மூலம் மாவட்ட, மாநில நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மாணவர்களுக்கு சான்றிதழ்களை யும், செலுத்திய கல்விக் கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் 2014 நவம்பர் மாதம் உறுதி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அந்த கல்வி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு ஜன.19-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகூர், உதய் உமேஷ் லலீத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், மாணவர்களுக்கு அசல் கல்விச் சான்றிதழ்களை உடனடியாக திரும்ப அளித்துவிட்டு, அதை மாணவர்கள் பெற்றுக்கொண்ட தற்கான ஒப்புதல் கடிதத்தை தாக்கல் செய்த பிறகு வழக்கை எடுத்துக்கொள்வதாக தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து அந்த கல்வி நிறுவனம் அசல் கல்வி சான்றிதழ் களை ஜன.22-ம் தேதி, தொடர் புடைய மாணவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தின் இந்த உத்தரவால் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர் களுக்கு நீதி கிடைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in