குழந்தைகள் மீது அத்துமீறல்கள் நடைபெறும்போது அரசு அமைப்புகளின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது: முனைவர் வசந்தி தேவி குற்றச்சாட்டு

குழந்தைகள் மீது அத்துமீறல்கள் நடைபெறும்போது அரசு அமைப்புகளின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது: முனைவர் வசந்தி தேவி குற்றச்சாட்டு
Updated on
1 min read

குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை, குழந்தை திருமணம் போன்ற அத்துமீறல்கள் நடைபெறும்போது அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அமைப்புகளின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று முனைவர் வசந்தி தேவி குற்றஞ்சாட்டினார்.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் யுனிசெப் ஆகியவை இணைந்து குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டத்தை நேற்று தொடங்கின.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முனைவர் வசந்தி தேவி கூறியதாவது:

குழந்தைகளை பாதுகாக்க சட்டங்கள் இருந்தாலும் அவர்களின் உரிமைகள் மீறப் படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குழந்தைகள் ஆபாச படங்களுக்காக கடத்தப் படுகிறார்கள். அதேபோல் குழந்தை திருமணம், பள்ளிகளில் பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. குழந்தைகளின் உரிமைகள் மறுக்கப்படுவதாலேயே இத்தகைய குற்றங்கள் நிகழ்கின்றன.

குழந்தைகள் மீது நடத்தப்படும் குற்றங்கள் குறித்து காவல் துறை மற்றும் நீதித்துறை ஆகிய அரசு அமைப்புகள் எடுக்கும் நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.

யுனிசெப் அமைப்பின் குழந்தை பாதுகாப்பு சிறப்பு அலுவலர் வித்யாசாகர் கூறும்போது, “நாட்டில் குழந்தைகளுக்கு முழுமையாக கல்வி உரிமை கிடைக்கவில்லை. இதன் காரணமாக 15 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளில் 50 சதவீத பேர் பள்ளியில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்படுகிறார்கள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in