

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம கோபாலன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று நாட்டில் பெரும் பிரச்னையாக விளங்கி வருவது பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமையாகும். இதற்கு முதல் காரணம் மேற்கத்திய கலாச்சார பாதிப்பு. மேலும், தொலைக்காட்சிகளும், திரைப்படங்களும் துணைப் போகின் றன. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. மகாத்மா காந்தி நம் நாட்டில் ராம ராஜ்யம் அமைய வேண்டும் என கனவு கண்டார்.
பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். மாணவர்களிடையே சமுதாய ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும். மேலும், பாலியல் கொடுமைக்கு மிகப் பெரிய காரணமாக இருப்பது மதுவாகும். இதை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.