

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் காந்திய மக்கள் கட்சி நிறுவன தலைவர் தமிழருவி மணியன் பேசியதாவது:
பாரதிய ஜனதா தலைமையில் தமிழகத்தில் அமைந்துள்ள கூட்டணி முரண்பட்ட கூட்டணி அல்ல; கொள்கை அடிப்படையில் தனித்தனியாக இருப்பவர்கள் காங்கிரஸை வீழ்த்த ஓரணியில் நிற்கின்றனர். தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்கிற நிலையை இந்தக் கூட்டணி உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்று சொன்னார்கள். விஜயகாந்த், வைகோ ஒன்றாக பிரச்சாரம் செய்தபோதே வைகோ வெற்றி பெற்றுவிட்டார். மத்திய அமைச்சராகவும் வைகோ வருவதும் உறுதி. நரேந்திர மோடி பிரதமராவது என்பது எழுதப்பட்ட தீர்ப்பு. நாடு உருப்பட வேண்டும் என தமிழக மக்களுக்கு அக்கறை இல்லாமல் போய்விடுமா?
காசு கொடுத்தால் ஓட்டு கிடைக் கும் என்றால் 2011 சட்டசபைத் தேர்தலில் திமுக தோற்றுப்போயி ருக்காது. 40 தொகுதிகளிலும் ஜெயிப்போம் என்று சொன்ன அதிமுக தற்போது 20 தொகுதி களில் ஜெயிப்போம் என்று தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டது. அதிமுக, திமுக கட்சிகள் யாரை பிரதமராக்க ஓட்டு வாங்கு கின்றனர் என்றே தெரியவில்லை.
ராமர் கோயில் கட்டுவதாக பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது அவர்களின் தொடர் கோரிக்கை. சிறுபான்மையினரின் உணர்வுகளைக் காயப்படுத்த கூடாது என் பதில் நாங்கள் தெளிவாக இருக் கிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நடக்கும், உச்ச நீதிமன்றத்தில் ராமர் கோயில் பிரச்சினை இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி ஆயிரம் மோடிகள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.
மோடி இந்தியர் நலன் என்றுதான் சொல்கிறார். இந்துக்கள் நலன் என்று சொல்வதில்லை. அப்படி அவர் சொன்னால், அவர்கள் பக்கம் நாங்கள் இருக்க மாட்டோம். மோடி தவறான முடிவை எடுத்தால், அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியை கூட்டணிக் கட்சிகள் நிச்சயம் செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.