Published : 26 Feb 2015 08:53 AM
Last Updated : 26 Feb 2015 08:53 AM

ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி - ஓசூர்: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வருமா?

கிருஷ்ணகிரி மக்களின் 73 ஆண்டு கால கனவான ரயில்வே திட்டம் குறித்த அறிவிப்பு இன்றைய ரயில்வே பட்ஜெட்டில் வெளி யாகலாம் என்கிற எதிர்பார்ப்பு மாவட்ட மக்களிடையே அதிகரித் துள்ளது.

ஆங்கிலேயர்கள் காலத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து பர்கூர் வழியாக கிருஷ்ண கிரி வரை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. வழியில் 5 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு, 1905-ம் ஆண்டு முதல் 1936 வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. 1942-ம் ஆண்டு ரயில் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூர் வரை ரயில் போக்கு வரத்து தொடங்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வரு கின்றனர். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கிரானைட் கற்கள், மா, புளி மற்றும் காய்கறி ஆகியவை வெளியூர் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சாலை போக்குவரத்தை மட்டுமே உற்பத்தியாளர்களும், விவசாயி களும் நம்பி உள்ளனர்.

இதுவரை கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களால், சர்வே, திட்ட மதிப்பீடு வரை மட்டுமே கொண்டு செல்ல முடிந்தது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சிறு, குறு தொழிற்சாலை களின் தலைவர் டி.ஏகாம்பவாணன் கூறும்போது, கடந்த காங் கிரஸ் ஆட்சியின்போது ஜோலார் பேட்டை - ஓசூர் (கிருஷ்ணகிரி வழியாக) புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டம், திட்ட கமிஷனிடம் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இத்திட்டத்துக்கு தேவை யான நிலத்தையும், திட்டப் பணிக்கான செலவில் 50 சதவீத பங்கையும் மாநில அரசு ஏற்றுக் கொண்டால் பரிசீலனை செய்ய முடியும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது வெளியாக உள்ள பட்ஜெட்டில் மத்திய அரசு புதிய ரயில் பாதை அமைக்க அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இத்திட் டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும், என்றார்.

கிருஷ்ணகிரி ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சங்க நிர் வாகிகள் கூறும்போது, மாவட்டத் தின் வளர்ச்சிக்கு ரயில் பாதை மிகவும் உதவிகரமாக இருக்கும். பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஓசூர் - கிருஷ்ணகிரி - ஜோலார்பேட்டை ரயில்வே திட்டத்துக்காக மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x