

சட்டப்பேரவை தலைவரை முற்றுகையிட்டு அமளி செய்த விவகாரம் தொடர்பாக தேமுதிக உறுப்பினர்கள் நேற்று பேரவை செயலரை சந்தித்து எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 19-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் பேசும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவை விமர்சிக்கும் வகையில் ஒரு கருத்தை வெளியிட்டார். இதன் காரணமாக பேரவையில் அமளியும் அதைத் தொடர்ந்து தேமுதிக உறுப்பினர்களுக்கும், அவைக் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டன.
இதையடுத்து, தேமுதிக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், பேரவைத் தலைவரை முற்றுகை யிட்டதற்காகவும், அவைக் காவலர்களை தாக்கியதற் காகவும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் மற்றும் வி.சி.சந்திரகுமார், கே.தினகரன், சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன் ஆகிய தேமுதிக உறுப்பினர்கள் 6 பேருக்கு உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது. பேரவையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து பிப்ரவரி 27-ம் தேதிக்குள் உரிமைக்குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பேரவையின் செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், சட்டப் பேரவை தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார், உறுப்பி னர்கள் எல்.வெங்கடேசன், எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் நல்லதம்பி, பாபு முருகவேல் ஆகியோர் கடைசி நாளான நேற்று காலையில் சட்டப்பேரவைச் செயலாளரை சந்தித்து உரிமைக் குழு நோட்டீஸுக்கு எழுத்துப் பூர்வமாக விளக்கக் கடிதத்தை அளித்தனர்.
இதுகுறித்து ஜமாலுதீன் கூறுகையில், “சட்டப்பேரவை உரிமைக் குழுவிடம் அளிக்க வேண்டிய விளக்கக் கடிதத்தை தேமுதிக உறுப் பினர்கள் என்னிடம் கொடுத் துள்ளனர். இந்த கடிதம் உரிமைக்குழுவின் தலை வருக்கு அனுப்பிவைக்கப் படும்” என்றார்.