Published : 11 Apr 2014 12:52 PM
Last Updated : 11 Apr 2014 12:52 PM

நகராட்சி இடம் ஆக்கிரமிப்பு: திமுக கவுன்சிலர் மீது புகார்: நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு எதிராக போராட்டம்

காஞ்சிபுரம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை திமுக நகர்மன்ற உறுப்பினர் ஆக்கிர மித்திருப்பதாக காவல்துறையில் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து, காஞ்சிபுரம் ஆசிரியர் நகர் குடியிருப்போர் நலச்சங்கச் செயலர் உத்திரகுமார் பேசியதாவது: ஆசிரியர் நகர் பகுதி முன்பு வேளிங்கப்பட்டரை கிராமத்துக்கு உள்பட்டதாக இருந் தது. பின்னர் இப்பகுதி காஞ்சிபுரம் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

எங்கள் பகுதியில் கடந்த 1982ம் ஆண்டு லேஅவுட் போடும் போது, அரசுப் பள்ளிக்கு, குடிநீர் மேல்நீர்தேக்கத் தொட்டி அமைக்க 27 சென்ட் இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. இது ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகள் நகராட்சியுடன் சேர்க்கப்பட்டபோது, மேற்கூறிய 27 சென்ட் நிலமும் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த இடத்தை தனக்கு சொந்தம் என்று கூறி திமுக நகர் மன்ற உறுப்பினர் கே.ஜீவலட்சுமி ஆக்கிரமித்து சுற்றி தடுப்புகளை அமைத்துள்ளார். மேலும் அப்பகுதியை பாது காக்க சமூக விரோதிகளை அவர் அமர்த்தியிருக்கிறார். இதனால் இப்பகுதியில் நாங்கள் அச்சுறுத்த லுடன் வாழ்ந்து வருகிறோம். அந்த இடத்தை மீட்டு தருமாறு காவல்துறையிடம் முறையிட்ட நிலையில், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையின் இச்செயலை கண்டித்து வீடுகள்தோறும் வியாழக் கிழமை கறுப்பு கொடி கட்டி எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால், மக்களவைத் தேர்தலில் எங்கள் பகுதியில் உள்ள 2 ஆயிரம் ஓட்டுகளும் நோட்டாவுக்கே செல் லும். இவ்வாறு அவர் பேசினார்.

எந்த ஆதரமும் இல்லை.

இதுகுறித்து நகரமன்ற உறுப்பினர் ஜீவலட்சுமியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: சம்பந்தப் பட்ட இடம் எங்கள் மூதாதையர் சொத்து. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அந்த இடம் நகராட்சியுடன் சேர்க்கப்பட்டதற் கான எந்த ஆதரமும் இல்லை. இந்த நிலம் தொடர்பாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். வழக்கு நிலுவையில் உள்ளது என்றார்.

திமுகவில் இருந்து நீக்குங்கள்

தகவல் அறிந்த காஞ்சிபுரம் நகர திமுக-வினர், தேர்தல் நேரத் தில் திமுக கவுன்சிலர் என்று ஏன் குறிப்பிடுகிறீர்கள் என்று ஆசிரியர் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினரிடம் கேட்டனர். ஜீவலட்சுமி திமுக-வில் இருப்பதால் தான் அவரை திமுக கவுன்சிலர் என்கிறோம். அவரை கட்சியில் இருந்து நீக்குங்கள். அதன் பிறகு கவுன்சிலர் என்று மட்டும் குறிப்பிடுகிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x