

சென்னை சட்டக் கல்லூரி மாணவர் களின் உள்ளிருப்பு போராட்டம் நேற்று 6-வது நாளாக தொடர்ந்தது. கல்லூரி இடமாற்றம் தொடர்பான அரசாணையை தீவைத்து எரித்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி யை இடமாற்றம் செய்யும் முடிவைக் கண்டித்து அக்கல்லூரி மாணவ-மாணவிகள் கடந்த 4-ம் தேதி முதல் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நேற்று 6-வது நாளாக தொடர்ந்தது. காலை 11.45 மணியளவில் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் எம்.வி.முருகதாஸ் மற்றும் பேராசிரியர்கள் மாணவ-மாணவி களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் பேசும்போது, “போராட் டத்தை கைவிட்டுவிட்டு வகுப்பு களுக்குச் செல்லுங்கள். உங்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்த தயாராக இருக்கிறார்கள். சட்டம் படிக்கும் மாணவர்களாகிய நீங்கள், சட்டரீதியாகத்தான் இந்த பிரச்சினையை அணுக வேண்டுமே தவிர இதுபோன்று போராட்டத்தில் ஈடுபடக்கூடாது” என்று அறிவுரை கூறினார்.
ஆனால், தங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தை தொடரப்போவதாக மாணவ-மாணவிகள் திட்டவட்டமாக கூறி விட்டனர். இதனால், கல்லூரி முதல்வரும், பேராசிரியர்களும் ஏமாற்றத்துடன் கல்லூரிக்கு திரும்பினர். இதேபோன்று ஏற்கெனவே ஒருதடவை மாணவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினரைக் கண்டித்தும் தமிழ் நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் டி.ராஜரத்தினம் தலைமையில் உயர் நீதிமன்ற வளாகத்தின் வடக்கு நுழைவு வாயில் முன்பு மதியம் 1.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆளுநரின் துணைச் செயலரிடம் கோரிக்கை மனு
மாணவர்கள் குட்டிமணி, பூபாலன் ஆகியோர் தலை மையிலான ஒரு குழுவினர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு விரைந்தனர். சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநரின் துணைச் செயலாளர் கே.வி.முரளிதரனிடம் நேரில் வழங்கினர்.