

காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் கர்னல் பானு கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரம் முன்னாள் படை வீரர்கள் மற்றும் 3 ஆயிரம் விதவைகள் என மொத்தம் 8 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களின் விவரங்களை மின் ஆளுமை திட்டத்தின் கீழ், இணையதளத்தில் பதிவு செய்யும் பணியை தொடங்கியிருக்கிறோம்.
குடும்ப அட்டை, வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றின் நகல்களுடன் தொலைபேசி எண் மற்றும் ஓய்வூ தியத்துக்கான பிரமாண் ஐடி விவரங்கள் ஆகியவற்றை, ‘முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர், ஜீவா காம்ப்ளெக்ஸ், பெரியார் நகர், ஜிஎஸ்டி சாலை, தாம்பரம்’ என்ற முகவரியில் நேரில் வழங்கலாம். அஞ்சல் அல்லது exwelkpm@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு கூட பிப்ர வரி 25-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என்றார்