Published : 15 Feb 2015 12:56 PM
Last Updated : 15 Feb 2015 12:56 PM

லோக் அதாலத்: ஒரு லட்சம் வழக்குகளில் ரூ.466 கோடி பைசல்

நாடு முழுவதும் நேற்று மெகா லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடந்தது. தமிழகத்தில் 29 மாவட்டங்கள், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகிய இடங்களில் 349 அமர்வுகளாக இந்த மெகா லோக் அதாலத் நடைபெற்றது.

இதில், வங்கி சார்ந்த வழக்குகள் மற்றும் காசோலை மோசடி தொடர்பான தாவாக்கள் என 1 லட்சத்து 5 ஆயிரத்து 906 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் சமரசம் மூலம் 19 ஆயிரத்து 877 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன. இதை யடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.466 கோடியே 54 லட்சத்து 38 ஆயிரத்து 364 வழங்கப்பட்டது. இந்த லோக் அதாலத் தில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும், நீதிமன்றத்துக்கு வராத வழக்கு களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டதாக தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x