

தேர்தல் வேலை செய்யாதே என்று கூறி திமுக நிர்வாகியை காவல்துறை அதிகாரி மிரட்டியதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை திமுக தலைமைக் கழக வழக்கறிஞர் ஐ.பரந்தாமன் செவ்வாயன்று நேரில் சந்தித்து ஒரு புகாரை அளித்துள்ளார்.அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுகவில் புழல் யூனியன் நிர்வாகியும் வழக்கறிஞருமான எம்.நாராயணனை சென்ட்ரல் கிரைம் பிராஞ்ச் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் அழைத்து திமுகவுக்கு தேர்தல் வேலைகளை செய்யக்கூடாது என மிரட்டி உள்ளார். ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியனும் அதேபோல மிரட்டி உள்ளார்.
இதே போல மாவட்டந்தோறும் திமுக நிர்வாகிகளுக்கு மிரட்டல்கள் விடப்படுவதாக நாங்கள் அறிகிறோம்.காவல்துறை அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு பாரபட்சம் இல்லாமல் பாதுகாப்பு வழங்கவேண்டும்.அதற்கு பதிலாக திமுக வை குறிவைத்து கொடுமைப்படுத்துவதாக நடந்து கொள்கிறார்கள்.
இந்த முறையில் காவல்துறை செயல்படுவதை ஏற்க இயலாது. எனவே, மேற்கண்டவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரி யிடம் வலியுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.