வழக்கறிஞர் கொலை: நீதிமன்றத்தில் 4 பேர் சரண்

வழக்கறிஞர் கொலை: நீதிமன்றத்தில் 4 பேர் சரண்
Updated on
1 min read

சென்னை சூளைமேட்டில் வழக்கறி ஞர் சந்திரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

சென்னை சூளைமேடு புது மேற்கு தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் சந்திரன் என்ற பாபு (28). இவர் கடந்த 10-ம் தேதி இரவு தமது வீட்டின் முன்பே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சூளைமேட்டை சேர்ந்த உமர் (25), ராஜ்குமார் (25), பாஸ்கரன் (24), நெமிலிச்சேரியை சேர்ந்த சரவணன் (25) ஆகியோர் நேற்று காலையில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். 4 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு உமரை சந்திரன் தாக்கி இருக்கிறார். இந்த முன்விரோதத்தில் உமர் தமது நண்பர்களுடன் சேர்ந்து சந்திரனை கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in