மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில மாநாடு: 16-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில மாநாடு: 16-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது
Updated on
1 min read

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு, பிப்ரவரி 16-ம் தேதி சென்னையில் தொடங்க வுள்ளதாக அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார்

சென்னையில் நேற்று நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டி.கே.ரங்கராஜன் கூறிய தாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 21-வது மாநில மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் பிப்ரவரி 16 முதல் 19-ம் தேதிவரை நடைபெறுகிறது. இதனையொட்டி சென்னையில் பல்வேறு தலைப் புகளில் கருத்தரங்குகள் நடைபெற் றுள்ளன. இக்கருத்தரங்குகளில் 40-க்கும் மேற்பட்ட கல்வி யாளர்கள், அறிஞர்கள், ஆராய்ச்சி யாளர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டு ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர். கட்சியின் எதிர்காலப் பணிகளுக்குப் பெரி தும் உதவும் வகையில் இந்த ஆய்வறிக்கைகள் விவாதிக்கப் பட்டன.

மேலும் வரும் 7-ம் தேதி ‘இந்திய ஊடகத்துறை’ எனும் தலைப்பில் நடைபெறவுள்ள கருத் தரங்கில் பத்திரிகையாளர் சசிக் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்கி றார்கள். 8-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கடற்கரை சாலையிலுள்ள காந்தி சிலை அருகில் தேச இறையாண்மை, மக்கள் ஒற்றுமை, மதச்சார் பின்மை ஆகியவற்றை பாதுகாக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா கலந்து கொள்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தச் சந்திப்பின்போது சட்ட மன்ற உறுப்பினரும் மாநில மாநாட்டு வரவேற்புக்குழுத் தலை வருமான க.பீம்ராவ், தென் சென்னை மாவட்டச் செயலாளர் அ.பாக்கியம் ஆகியோர் உட னிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in