Published : 23 Feb 2015 10:37 AM
Last Updated : 23 Feb 2015 10:37 AM

கோவை வனக் கல்லூரியில் 27-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டம் நீடிக்கிறது : வாபஸ் இல்லை மாணவர்கள் அறிவிப்பு

வனத் துறை பணியிடங்களில் வன வியல் பட்டதாரிகளுக்கு இட ஒதுக்கீடு கோரி மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மாணவ- மாணவிகள் 27-வது நாளாக நேற்றும் உள்ளி ருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

‘வனச் சரகர் காலிப் பணியிடங் களை வனவியல் பட்டதாரிகளைக் கொண்டு நிரப்ப வேண்டும். வனவர் பணியிடங்களுக்கு வனவியல் பட்டதாரிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ- மாணவிகள் கடந்த 27-ம் தேதி முதல் காலவரையற்ற வகுப்புப் புறக்கணிப்பு மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக இரவு, பகலாக கல்லூரி வளாகத்தில் அமர்ந்த படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அவர்கள் நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 6 நாட்களாக காலவரையற்ற உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ‘தொடர் போராட் டம் காரணமாக உடல் ரீதியாக பல வீனமடைந்துவிட்டோம். ஆரோக் கியத்துடன் இருந்தால்தான் போராட்டத்தைத் தொடர முடியும். எனவே, உண்ணா விரதத் தைத் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்தோம். ஆனால், தீர்வு கிடைக்கும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும்’ என்று மாணவர்கள் நேற்று அறிவித்தனர்.

அதன்படி, 27-வது நாளாக நேற்றும் மாணவிகள் 65 பேர் உட்பட 213 பேர் உள்ளிருப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x