

சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதியில் முதலீட்டாளர்கள் ஆயத்த மாநாடு இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த மாநாட்டை தொடங்கி வைத்து தலைமை தாங்குகிறார்.
இந்த முதலீட்டாளர்கள் ஆயத்த மாநாட்டில் இந்திய தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த தலைவர்கள், பன்னாட்டு கம்பெனிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
மே மாதம் 23, 24ல் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு முன்னோட்டமாக தொழிலதிபர்களைச் சந்திக்கும் ஆயத்த மாநாடு சென்னையில் நடைபெறுகிறது.