மேல்மலையனூர் கோயிலில் மாசி திருவிழா நாளை தொடக்கம்

மேல்மலையனூர் கோயிலில் மாசி திருவிழா நாளை தொடக்கம்
Updated on
1 min read

மேல்மலையனூரில் உள்ள அங் காளம்மன் கோயில் மாசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மேல்மலையனூர் அங்காளம் மன் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு மாசி திருவிழா நாளை (பிப்.17-ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 18-ம் தேதி காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் மயான கொள்ளையும், இரவு அம்மன் ஆண் பூத வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும்.

23-ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேர் வீதி உலா நடைபெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in