Last Updated : 03 Feb, 2015 12:04 PM

 

Published : 03 Feb 2015 12:04 PM
Last Updated : 03 Feb 2015 12:04 PM

நெனச்சிப் பாக்க முடியுமா?

கிண்டல் செய்வதில் என் னென்ன வகையான அத்துமீறல்கள் உண்டோ அனைத்தையும், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன் அரங்கேற்றும் கும்பல் இது.

சமீபத்தில் பாலிவுட் தயாரிப் பாளர் கரன் ஜோஹர், நடிகர்கள் அர்ஜூன் கபூர், ரன்வீர் சிங்கை வறுத்தெடுத்தது இந்த கும்பல். பதிலுக்கு இந்த கும்பலின் அத்தனை உறுப்பினர்களையும் அவர்களது மூன்று தலைமுறை முன்னோர்களையும் முறைப்படி ‘வாழ்த்தினார்கள்’ நடிகர் கள். இத்தனைக்கும் மேடையில் இருந்தவர்களின் உற்றார், உறவினர்கள் தங்கள் நண்பர்கள் புடைசூழ வந்து முன்வரிசையில் அமர்ந்து கைதட்டி ரசித்தார்கள்.

தொடக்கத்தில் குறிப்பிட்ட கற்பனைச் சம்பவம் பாலிவுட் விருது வழங்கும் விழாவில் சைஃப் அலிகானையும் ஷாருக்கானையும் பார்த்து நமது மாதவன் திட்டிய உண்மைச் சம்பவம்! ஒரு நிகழ்ச்சியில் நடிகர் நானா படேகரை முழுப் பைத்தியம் என்று ஒரு மிமிக்ரி கலைஞர் கிண்டல் செய்தபோது, அரங்கு அதிரச் சிரித்து கைதட்டி மகிழ்ந்தவர் சாட்சாத் நானாவேதான்!

அதேபோல், ‘தாரக் மேத்தா கா உல்ட்டா சஷ்மா’ எனும் இந்தி நகைச்சுவைத் தொடரில் அமிதாப் பச்சன், ஷாரூக்கான், சல்மான் கான், அஜய் தேவ்கன் என்று அனைத்து முன்னணி நடிகர்களும் தோன்றி நடிக்கிறார்கள். அவர்கள் கிண்டல் செய்யப்படும் காட்சிகளும் உண்டு.

ஏ.ஐ.பி. நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், தமிழிலும் இதுபோன்ற ‘ஆரோக்கியமான கருத்துச் சுதந்திரம்’ நிகழாதா என்று அலுவலக வேலைகளை விட்டுவிட்டு இணையத்தில் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நடிகர்களைக் கேலி செய்யும் பாரம்பரியம் நம்மிடமும் உண்டு.

டி. ராஜேந்தர், சிவாஜி, சிவகுமார், சூர்யா, ‘கரகாட்டக்காரன்’ புகழ் சண்முகசுந்தரம் என்று பல நடிகர்களின் குரல்களையும், உடல்மொழியையும் பிரதியெடுத்து, நகைச்சுவையான வசனங்கள் பேசும் மிமிக்ரி நிகழ்ச்சிகள் நம்மிடையே பிரபலம். அதேபோல் பேஸ்புக் கமெண்ட் படங்கள், யூடியூப் ஸ்பூஃப் வீடியோக்களும் நடிகர்கள், இயக்குநர்களைப் பிரமாதமாகக் கிண்டல் செய்கின்றன. ஆனால், அதைப் பெரும்பாலான நடிகர்கள் சகஜமாக எடுத்துக்கொள்வதில்லை.

“மிமிக்ரி கலைஞர்கள் என்னைப்போல் ‘பிர்கா’ குரலில் வசனம் பேசலாம். ஆனால், என்னைப்போல் இலக்கியம் படித்திருக்க முடியுமா?” என்று கோபப்பட்டார் சூர்யாவின் அப்பா. கேலி செய்யப்படும் நடிகர்களின் ரசிகர்கள், எதிர்முகாமைச் சேர்ந்தவர்களுக்குத் தக்க பதிலடி கொடுப்பது (இணையத்தில்தான்!) வழக்கமாகவே இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர், இரண்டாம் நிலை நடிகர்களை விருந்தினர்களாக அழைத்து, கிண்டல் செய்யும் ‘அரிகிரி அசெம்ப்ளி’ நிகழ்ச்சியை மறைந்த நடிகர் சிட்டிபாபு, பாஸ்கி போன்ற குசும்பர்கள் நடத்தினர்.

விருந்தினர்கள் நொந்துபோய் அழுவது முதல் அடிக்கப் பாய்வது வரை செல்லுமாறு கடுமையாக உசுப்பேற்றுவார்கள் அதில். ஆனால், அதில் முன்னணி நடிகர்கள் பங்கேற்கவில்லை.

முதல் படத்திலேயே முதல்வர் கனவுடன் களமிறங்கும் நடிகர்கள் உள்ள தமிழ்ச்சூழலில் ‘இமேஜ்’ எனும் வார்த்தைக்கு வலுவான அர்த்தம் உண்டு. எனவே, தமிழ் நடிகர்கள் தங்களைப் பொதுவெளியில் கிண்டல் செய்யும் நிகழ்வுகளைத் தவிர்ப்பதில் சகல நியாயங்களும் இருக்கின்றன.

பாலிவுட் நடிகர்களுக்கு அந்தக் கவலையே இல்லை என்பதுதான் இதில் முக்கியமான விஷயம். மிஞ்சிப்போனால் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பார்கள் இந்தி நடிகர்கள். அவ்வளவுதான்!

எனவே, இன்றிருக்கும் சூழலில் இப்படியான ஏ.ஐ.பி. போன்ற நிகழ்ச்சிகள் தமிழில் சாத்தியமில்லை. அதுவும் கெட்டவார்த்தை நிகழ்ச்சி என்றால் முடிந்தது கதை!

ஏதோ ஒரு திரைப்பட விருது விழா என்று வைத்துக் கொள்ளுங்கள். தொகுப்பாளர்களான அஜீத்தும், விஜய்யும் ஒருவரையொருவர் கிண்டல் செய்துகொண்டும், அரங்கில் அமர்ந்திருப்பவர்களைத் தனிப்பட்ட முறையில் கேலிசெய்துகொண்டும் இருக்கிறார்கள். ஒரு பாலிவுட் நடிகர் எழுந்து, ‘போங்கடா கிறுக்குப் பசங்களா’ என்று இந்தியில் திட்டுகிறார்.

அரங்கே கெக்கலித்துச் சிரிக்கிறது. அதையும் ‘ஜாலி’யாக எடுத்துக்கொண்டு ‘சேம் டூ யூ’ என்று சிரிக்கிறார்கள் அஜீத்தும் விஜய்யும். இதுபோன்றதொரு காட்சியை, ‘அரசு’ படத்தில் சிம்ரனிடம் வடிவேலு சொல்வதுபோல் “நெனச்சிப் பாக்க முடியுமா?”

ஆனால் கிறுக்கு, பைத்தியம் என்ற வார்த்தைகளையெல்லாம் தாண்டி, கல்வித் தகுதி, பாலியல் தேர்வு என்று சகல விஷயங்களையும் வைத்து கெட்டக் கெட்ட வார்த்தைகள் மூலம் பொது மேடையில் பாலிவுட் பிரபலங்களைப் பிரித்து எடுக்கிறார்கள், ஏ.ஐ.பி. அதாவது ‘ஆல் இண்டியா பக்சோத்’ (அர்த்தமே இல்லாமல் உளறுபவர்களை குறிக்கும் சொல்) என்ற குழு அல்லது அமைப்பு அல்லது கும்பல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x