Published : 17 Feb 2015 09:32 am

Updated : 17 Feb 2015 09:34 am

 

Published : 17 Feb 2015 09:32 AM
Last Updated : 17 Feb 2015 09:34 AM

சாஸ்த்ரா பல்கலை.யுடன் இணைந்து ‘தி இந்து’ நடத்திய நிகழ்ச்சி: சிறுபான்மையினரின் அச்சத்தை மோடி போக்க வேண்டும் - மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வலியுறுத்தல்

இந்தியாவில் அண்மைக்காலமாக மதச் சிறுபான்மையினரிடயே ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற உணர் வைப் போக்க பிரதமர் மோடி வெளிப்படையாக கருத்து தெரி விக்கவேண்டும் என மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி வலியுறுத்தி யுள்ளார்.

‘புதிய இந்தியாவுக்கேற்ற புதிய சிந்தனைகள்’ என்னும் தலைப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் பங்கேற்கும் குழு விவாதத்தினை, சென்னையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘தி இந்து’ ஏற்பாடு செய்திருந்தது. அதில் கோபால கிருஷ்ண காந்தி பேசியதாவது:

கிராமப்புற மகளிர் மேம் பாட்டுக்கு பெரிதும் உதவியாக உள்ள 100 நாள் வேலைத்திட்டம் ரத்து செய்யப்படும் நிலை உரு வாகியுள்ளது. தாய்மதம் திரும்பு தல் போன்ற பிரச்சாரங்களால் மதச் சிறுபான்மையினரிடையே ஒருவித பாதுகாப்பற்ற மற்றும் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றிய அச்சத்தினைப் போக்க பிரதமர் மோடி வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவேண்டும்.

ஆடிட்டர் குருமூர்த்தி:

இந்தியாவில் மதங்களுக்குள்ளாகவே உள்ள வேற்றுமைகள், மற்ற மதங்களில் உள்ள வேற்றுமைகளை ஏற்கும் சகிப்புத்தன்மை இருந்து வந்ததால் உயிர்ப் பலிகள் நிகழவில்லை. அதுவே சமூக ஒற்றுமைக்கு முக்கிய கருவியாகும். பிற மதத்தினரின் நம்பிக்கையை மற்ற மதத்தவரும் மதிக்க வேண்டும்.

கர்நாடக காங்கிரஸ் துணைத் தலைவர் பி.கே.சந்திரசேகர்:

அரசியலமைப்புச் சட்டத்தின் படி, அரசியல் கட்சிகள் நாடாளு மன்றத்தில் வளர்ச்சிக்கான விவாதங்களில் ஈடுபடவேண்டும். மதச்சார்பின்மை என்பதில் அனைத் துக் கட்சிகளும் ஏற்கும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்குவது பற்றிய விவாதம் வேண்டும்.

பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன்:

இந்தியா அண்மைக்காலமாக பெற்றுவரும் வளர்ச்சிக்கு, கூட்டாண்மை, தனிநபர் நிறுவனங் கள் அல்லது அமைப்பு சாரா தொழில்களே முக்கிய காரணம். பொருளாதாரத்தில் அவர்களது பங்கு 50% ஆகும். இவர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணிகள். இதுபோன்ற நிறுவனங்களால்தான் வடகிழக்கு மாநிலத்தில் இருப்பவர், மதுரை போன்ற தென்னகப் பகுதிகளிலோ, மும்பையிலோ வந்து பணிபுரிகிறார்கள். நம் நாட்டின் பொருளாதார ஒற்றுமையை இந்த அமைப்புசாரா நிறுவனங்கள் பாதுகாத்து வருகின்றன. ஆனால், அவர்களுக்கான வங்கிக் கடன் 2012-ஐ (50%) விட தற்போது (30%) குறைந்துவிட்டது. வெளிநாடு களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி பணத்தைத் திரும் பப் பெற நடவடிக்கை வேண்டும்.

இவ்விவாதத்தின் நெறியாள் கையை, ‘தி இந்து’ முதுநிலை மேலாண் ஆசிரியர் வி.ஜெயந்த் மேற்கொண்டார். இறுதியில், ‘தி இந்து’ குழும முதன்மை நிர்வாக அலுவலர் ராஜீவ் லோச்சன் நன்றி கூறினார். முன்னதாக, சாஸ்த்ரா பல்கலைக்கழக திட்டமிடல் டீன் வைத்தியசுப்பிரமணியன் வரவேற்றார்.

சாஸ்த்ரா பல்கலைக்கழகம்தி இந்துசிறுபான்மையினர்மோடிமேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி

You May Like

More From This Category

More From this Author