அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு உபகரணங்கள் வாங்க ரூ.83 லட்சம் நிதியுதவி: பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வழங்கப்பட்டது

அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு உபகரணங்கள் வாங்க ரூ.83 லட்சம் நிதியுதவி: பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வழங்கப்பட்டது
Updated on
1 min read

அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் கீமோதெரபி சிகிச்சை பிரிவுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.83.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

இது தொடர்பாக எஸ்பிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பாரத ஸ்டேட் வங்கி தனது லாபத்தில் ஒரு சதவீதத்தை பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் (சி.எஸ்.ஆர்.) கீழ் செலவிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாரத் ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டம் சார்பில் 2014-15-ம் ஆண்டில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக ரூ.32.94 லட்சம் வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி பல்வேறு பள்ளிகளுக்கு ரூ. 35 லட்சம் செலவில் 110 கணினிகள் வழங்கப்பட்டன.

மேலும் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் கீமோதெரபி சிகிச்சை பிரிவுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்க ரூ.83.50 லட்சம் வழங்கப்பட்டது.

புதிய என்ஆர்ஐ கிளை

மேலும் அடையாறு, சாஸ்திரி நகர், முதல் அவென்யூவில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான புதிய கிளையை பாரத ஸ்டேட் வங்கி தொடங்கியுள்ளது. திறப்பு விழாவில் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் குழும நிர்வாகி பி.ஸ்ரீராம், தலைமை பொது மேலாளர் பி.எஸ்.பிரகாஷ் ராவ், பொது மேலாளர்கள் தீபக் குமார், ரீட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்த போதிய விசாலமான இட வசதியுடன் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய கிளையில் வெளிநாடு வாழ் இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in