Published : 27 Feb 2015 10:19 AM
Last Updated : 27 Feb 2015 10:19 AM

கிருஷ்ணகிரி வங்கிக் கொள்ளை: ‘சைபர் கிரைம்’ போலீஸார் விசாரணை நடத்த திட்டம்

கிருஷ்ணகிரி அருகே ராமாபுரம் கிராமத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி குந்தாரப்பள்ளி கிளையில் கடந்த ஜனவரி 24-ம் தேதி புகுந்த மர்ம நபர்கள் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து ரூ.12 கோடி மதிப்பிலான 6,033 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து எஸ்பி கண்ணம்மாள் தலைமையிலான 10 தனிப்படை போலீஸார் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வங்கியில் கொள்ளைச் சம்பவம் நடந்த அன்று, குந்தாரப்பள்ளி பகுதியிலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்போன் மூலம் பேசியவர்கள் விவரங்களை தனிப்படை போலீஸார் சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தி னர். போலீஸார் சேகரித்த செல் போன் எண்களில், 25 சதவீதத்துக் கும் மேல் போலி ஆவணங்களைக் கொடுத்து சிம் கார்டுகள் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்துள் ளது. அதிர்ச்சியடைந்த போலீஸார் சைபர் கிரைம் போலீஸாரின் உதவியை நாடியுள்ளனர்.

இது குறித்து போலீஸார் கூறிய தாவது: வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய, ஜார்க்கண்ட் மாநிலத் தில் தொடர்ந்து ஒரு மாதமாக தனிப்படை போலீஸார் இரவு, பகலாக விசாரணை நடத்தி வரு கின்றனர். இதேபோல் பல மாநிலங் களில் தனிப்படை போலீஸார் முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கு, அம்மாநில போலீஸார் உதவி செய்ய முன்வருவதில்லை.

இது தவிர செல்போன் எண்கள் மூலம் மேற்கொண்ட விசாரணை யில் பலர் போலி ஆவணங்களை கொடுத்து சிம் கார்டுகள் பெற் றுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப் பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

தற்போது தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்ய சைபர் கிரைம் போலீஸார் உதவியை நாடி உள்ளோம். அவர்களது விசாரணை மூலம் குற்றவாளிகள் கைது செய்ய தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு போலீஸார் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x