

சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் தலையில் கட்டையால் தாக்கிய இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி போக்குவரத்து போலீஸ் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் சித்திரைவேலு(50). இவர் நேற்று காலையில் சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள சாலை சந்திப் பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இளைஞர், கையில் வைத்திருந்த கட்டையால் சித்தரைவேலுவின் தலையில் அடித் தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் போலீஸை தாக்கிய இளைஞரை மடக்கிப் பிடித்து பூக்கடை போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட இளைஞர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலையில் காயமடைந்த சப்-இன்ஸ் பெக்டர் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.