Published : 11 Apr 2014 01:12 PM
Last Updated : 11 Apr 2014 01:12 PM

இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மறுவாழ்வு பெற்ற நைஜீரிய இளைஞர்

சென்னையில் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற நைஜீரிய இளைஞர், சிகிச்சை அளித்த டாக் டர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

நைஜீரியாவைச் சேர்ந்தவர் இபூவோ டுண்டே (43). ஒரு நிறுவனத்தில் காசாளராக பணி யாற்றி வந்த அவருக்கு திடீரென இடுப்பில் கடும் வலி ஏற்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல ஒரு கட்டத்தில் இடுப்பின் இரு பக்கங்களும் விறைப்பாகி நடக்க முடியாத நிலைக்கு ஆளானார் டுண்டே. நைஜீரியாவில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தபோதும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. வாழ்க்கை முடிந்தது அவ்வளவுதான் என்று நம்பிக்கை தளர்ந்த நிலையில், அவரது உறவினரான மருத்துவர் கொடுத்த தகவல் ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

அதன்படி சென்னை ஹீலி யாஸ் மருத்துவமனை டாக்டர் நந்த குமாரிடம் படுத்த படுக்கையாக கொண்டு வரப்பட்டார் டுண்டே. அவரைப் பரிசோதித்த டாக்டர் நந்தகுமார் மற்றும் டாக்டர் கருப்பையா, டாக்டர் பிரசாத், டாக்டர் தயாளன் குழுவினர் ‘ஆட்டோ இமினோ டிஸ்சிஸ்’ என்ற அரிய வகை நோயால் டுண்டே பாதிக்கப்பட்டிருப்பதை பரிசோதனை மூலம் கண்டறிந் தனர். இந்த நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு மூட்டுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிவிடும். இதனால் கால் மூட்டு, இடுப்பு மூட்டு, தண்டுவடம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்படும்.

டாக்டர் நந்தகுமார் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் டுண்டேவுக்கு 2 வாரங்களுக்கு முன்பு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து செயற்கை மூட்டுகளை வெற்றிகரமாக பொருத்தினர். இரண்டரை மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது ஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார் டுண்டே. அவர், தனது மருத்துவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x