

தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளையும் ‘ஸ்மார்ட் நகரங்கள்’ திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் இதுபற்றி கூறியதாவது:
விரைவான நகர்மயமாதல் என்பது நகர்ப்புற கட்டமைப்பு மேலாண்மைக்கு பெரும் சவாலாக உள்ளது. மாநிலத்தில் உள்ள நகரப்புற பகுதிகளின் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்ய ஆண்டுதோறும் ரூ.750 கோடி மதிப்பீட்டில் ‘ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்’ மற்றும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் மொத்த நகர்ப்புற மக்கள்தொகையில் 25 சதவீதம் பேர் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக் கின்றனர்.
சென்னை மாநகரத்தின் குறிப் பிட்ட தேவைகளை நிறைவுசெய்ய ஆண்டுதோறும் ரூ.500 கோடி ஒதுக்கீட்டில் ‘சென்னை பெருநகர் மேம்பாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் மழைநீர் வடிகால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அவற்றை ‘ஸ்மார்ட் நகரங்கள்’ திட்டத்தில் மத்திய அரசு சேர்க்க வேண்டும்.