

காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்து அறிந்துகொள்ளவும், அதற்கு தேசிய அளவில் ஆதரவு திரட்டித் தரவும் சமூக ஆர்வலரும், நர்மதா பச்சாவோ அந்தோலன் அமைப்பின் தலைவருமான மேதாபட்கர் நாளை (பிப். 8) தஞ்சாவூர் வருகிறார்.
நாளை மாலை 4 மணியளவில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெறும் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். எனவே, மீத்தேன் எதிர்ப்பு இயக்கத்தினர், விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆகியோர் மேதாபட்கர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.