

சென்னையில் ஓடும் கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி மீட்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் அறிவிக் கப்பட உள்ளன. இத்திட்டத் துக்காக அரசு ரூ.605 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி, சென்னைக்குள் 16 கி.மீ. ஓடுகிறது கூவம் ஆறு. கூவம் ஆற்றின் தொடக்கப் பகுதியை இன்றும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சென்னைக்குள் ஓடும் ஆற்றின் பகுதி, கண்ணால் பார்க்கக்கூட சகிக்க முடியாத அளவுக்கு மாசடைந்துள்ளது. கூவம் என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் மூக்கை பொத்திக்கொள்ளும் நிலைதான் உள்ளது.
சென்னை ஆறுகளை மீட்கும் அறக்கட்டளை (Chennai rivers restoration trust) என்ற அரசு அமைப்பின் மூலம் கூவத்தை மீட்கும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதற்காக 2012-ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது. ஒன்று முதல் 3 ஆண்டுகளை வரை குறுகிய கால திட்டம், 4 முதல் 8 ஆண்டுகள் வரை நடுத்தர கால திட்டம், 8 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட கால திட்டம் என 3 கட்டங்களாக இத்திட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.
குறுகிய கால திட்டத்தில் ஆற்றை சுத்தப்படுத்துவது, கரையோரங்களை அழகுபடுத்து வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களில் ஆற்றின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதுகுறித்து அரசு உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கூவம் ஆற்றை மீட்கும் குறுகிய கால திட்டப் பணிகள் பொதுப்பணித் துறை, மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட துறை களுக்கு பிரித்து அளிக்கப்பட்டுள் ளன. இதற்கு தமிழக அரசு ரூ.604.77 கோடி ஒதுக்கியுள்ளது. இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன’’ என்றார்.
ஆற்றின் கரைகளில் உள்ள குப்பைகளை அகற்றுவது, தடுப்பு வலைகள், பூங்காக்கள் அமைப் பது உள்ளிட்ட பணிகளை ரூ.101.6 கோடி செலவில் மாநகராட்சி மேற் கொள்ளும். சுத்தப்படுத்தப்பட்ட கரையோரங்களில் 5 பூங்காக் கள், 4 நடைபாதை வழிகள் அமைக் கப்படும். ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை பொதுப்பணித்துறை யும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணியை சென்னை குடி நீர் வாரியமும் மேற்கொள்ளும். இத்திட்டத்தின்போது அகற்றப்படும் குடிசைப் பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் பணியை தமிழ்நாடு குடிசை மாற்றும் வாரியம் மேற்கொள்ளும்.