Published : 18 Feb 2015 10:38 AM
Last Updated : 18 Feb 2015 10:38 AM

கருணாநிதி, விஜயகாந்த் பேரவைக்கு வரவில்லை

* திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், திமுக உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேரவைக்கு வரவில்லை.

* முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 11 மணியளவில் பேரவைக்கு வந்தார். அவர் முதல்வருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் முதன்முறையாக நேற்று அமர்ந்தார். கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், நிதியமைச்சராக இருந்தபோது அமர்ந்திருந்த இருக்கையில்தான் அமர்ந்திருந்தார். இப்போதுதான் முதல்வர் இருக்கையில் அமர்ந்தார்.

* ஜி.கே.வாசன் ஆதரவாளர்களான ரங்கராஜன், ஜான் ஜேக்கப் ஆகியோருக்கு தனி இடம் ஒதுக்கப்படவில்லை.

* ஆளுநர் உரையின் 40 பக்கங்களில், ஒரேயொரு இடத்தில் மட்டும் ஜெயலலிதா பெயர் இடம்பெற்றிருந்தது.

* மோனோ ரயில் பற்றி ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிட வில்லை.

* வழக்கமாக, பேரவைக் கூட்டம் நடக்கும்போது காவல்துறை யினரின் கெடுபிடி கடுமையாக இருக்கும். நேற்று அப்படி எதுவும் இல்லை.

* பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுங்கட்சி உறுப்பினர்களிடம் வழக்கமான உற்சாகம் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x