

தமிழக அரசு மீது மக்கள் வைத் துள்ள நம்பிக்கையை உறுதிப் படுத்தும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலிலும் மகத்தான வெற்றியை அளித்துள்ளனர் என்று ஆளுநர் ரோசய்யா பாராட்டு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று உரையாற்றிய ஆளுநர், இதுபற்றி குறிப்பிட்டதாவது:
முழுமையான வளர்ச்சியை உருவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ள தமிழக அரசின் மீது வைத்துள்ள பெரும் நம்பிக்கையை உறுதிபடுத்தும் வகையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை மக்கள் வழங்கியுள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை இந்த அரசு தொடர்ந்து நிறைவு செய்யும் என நம்புகிறேன்.
அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய வளர்ச்சியை ஏற்படுத்தி அனைத்து தரப்பு மக்களின் நலனை, குறிப்பாக ஏழை எளியோரின் நலனை பாதுகாக்கக்கூடிய வகையில் அரசு மேற்கொண்டு வரும் பெரும் முயற்சிகளை மிகவும் பாராட்டுகிறேன். வளர்ச்சி இலக்குகளை எட்டுவதுடன் பரிவுணர் வோடு வடிவமைக்கப்பட்ட பல் வேறு நலத்திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
சிறப்பாக பராமரிக்கப்படும் சட்டம் – ஒழுங்கு, ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். கட்டுப்பாடும் ஊக்க மும் நிறைந்த காவல்துறை மூலம் எப்போதும் பாகுபடற்ற முறையில் சட்டத்தை நிலைநிறுத்தி மாநிலத் தில் பொது அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் பேணுவதை அரசு உறுதிசெய்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட திறன்மிக்க நடவடிக்கைகளால் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி, மக்களுக்கு முழு பாதுகாப்பான உணர்வை காவல்துறை ஏற் படுத்தியுள்ளது. விழிப்புண ர்வோடு எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தமிழகத் தில் ஊடுருவும் தீவிரவாத சக்திகளின் முயற்சிகள் முறியடிக்கப் பட்டுள்ளன. இவ்வாறு ஆளுநர் ரோசய்யா கூறினார்.