தொழில் உரிமம் புதுப்பிக்க மாநகராட்சி கெடு

தொழில் உரிமம் புதுப்பிக்க மாநகராட்சி கெடு
Updated on
1 min read

சென்னை மாநகராட்சி எல்லைக் குள் தொழில் நடத்துபவர்கள் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் தொழில் உரிமங்களை புதுப்பிக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநக ராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொழில் உரிமம் புதுப்பிக்கும் முன் வணிகர்கள் கீழ்க்கண்ட நிபந் தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். தொழிலின் பெயர் தமிழில் பெயர் பலகையில் எழுதப் படவேண்டும், மழைநீர் வடிகால் வாயில் எந்த கழிவு நீர் இணைப்பும் செலுத்தக் கூடாது, தவறினால் இணைப்பு துண்டிக் கப்பட்டு, வணிகம் மூடி முத்திரை யிடப்படும். வணிக வளாகத்தில் கண்காணிப்பு கேமரா, மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக சரிவுப்பாதை அமைக்க வேண்டும். அச்சகம் மற்றும் டிஜிட்டல் பேனர் நடத்திவருபவர்கள் விளம்பரம் வேண்டி வரும் மக்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை பெற்றுக் கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

மார்ச் 31-ம் தேதிக்குள் தொழில் உரிமம் புதுப்பிக்கும் விண்ணப் பத்தை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். புதுப்பிக்க தவறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in