Published : 09 Feb 2015 10:11 AM
Last Updated : 09 Feb 2015 10:11 AM

தமிழர் வளர்த்த தத்துவங்கள்: பொன்னேரியில் நூல் வெளியீடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டைமுன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் எழுத்தாளர் தேவ.பேரின்பன் எழுதிய, ‘தமிழர் வளர்த்த தத்துவங்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று முன் தினம் நடந்தது.

இதில், கட்சியின் மாவட்ட செய லாளர் பன்னீர்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ராஜன், சமூக ஆர்வலர் தனுஷ்கோடி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில், சிறப்பு விருந்தின ராக பங்கேற்ற மார்க்சிஸ்ட் மாத இதழின் ஆசிரியர் குணசேகரன் நூலை வெளியிட, மூத்த வழக்கறி ஞர் நந்தகோபால் பெற்றுக் கொண் டார். வரலாற்று ஆய்வாளர் ஜெகன் நூலை அறிமுகப்படுத்தினார். பின்னர் குணசேகரன் பேசியதாவது: 1980-களில் பென்னாகரம் முழுவதும் சாதி வெறி கொழுந்துவிட்டு எரிந்த கால கட்டத்தில் இரு சமூக மக் களுக்குமிடையே ஒற்றுமையை நிலைநிறுத்த பாடுபட்டவர் எழுத் தாளர் தேவ.பேரின்பன் என குறிப் பிட்டார். இயக்கவியல் பொருள் முதல் வாதத்தை முழுமையாக தெரிந்துக்கொண்டால் சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை போக்க முடியும். பொதுவுடமையையும் தமிழகத்தில் கொண்டு வர முடியும் என்ற கருத்துடைய நூலை மக்களிடம் பரவலாக கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x