

சட்டப்பேரவையில் நேற்று தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் நடுவர் மன்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.வி.வேலுமணி ஒரு மசோதாவை தாக்கல் செய்தார்.
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக மத்திய அரசு அறிவுறுத்தலின்படி கடந்த ஆண்டு இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது. இந்நிலையில், நடுவர் மன்ற தலைவர் பதவிக்கு நியமிக் கப்படுவர் அரசின் முதன்மைச் செய லாளர் அந்தஸ்தில் இருக்க வேண் டும் என்பதை செயலாளர் அந்தஸ் தில் இருக்கலாம் என்று மாற்றியும், செயலாளர் பணியில் இருப்பவரை மட்டுமின்றி செயலாளராக பணியாற்றி யவரையும் (ஓய்வு பெற்றவர்) நடுவர் மன்றத் தலைவராக நியமிக்கும் வகையிலும் சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது.
ஓய்வுபெற்ற செயலாளர்களை நியமிக்க சட்டத்திருத்தம் வகை செய்வதாக கூறி இந்த மசோதாவுக்கு திமுக உறுப்பினர் துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப் போது அவை முன்னவர் நத்தம் விஸ்வநாதன் குறுக்கிட்டு, ‘‘பணியில் இருந்திருப்போரை மட்டுமின்றி பணி யில் உள்ளவரையும் நியமிக்கலாம்’’ என்று விளக்கம் அளித்தார். இதே கருத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வ மும் முன்வைத்தார்.
திமுக ஆட்சியின்போது ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டதை வீட்டுவசதித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் சுட்டிக்காட்டினார். இந்தச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.