Published : 19 Jan 2015 09:42 AM
Last Updated : 19 Jan 2015 09:42 AM

உடலில் தானாக தீக்காயங்கள் ஏற்படும் குழந்தைக்கு தீவிர சிகிச்சை: காரணத்தை கண்டுபிடிக்க மருத்துவ ஆராய்ச்சி

உடலில் தானாக தீக்காயங்கள் ஏற்படும் குழந்தைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டீன் தலைமையில் டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த நெடிமோழியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணா (26). கூலித் தொழிலாளி. இவரின் மனைவி ராஜேஸ்வரி (24). இவர்களுக்கு நர்மதா (3), ராகுல் (2) என்ற குழந்தைகள் உள்ளனர். நர்மதாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ராகுலுக்கு பிறந்த இரண்டரை மாதங்களில் உடலில் திடீரென தீக்காயங்கள் ஏற்பட்டன. அவருக்கு கீழ்ப் பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இப்போது அந்த குழந்தை நன்றாக உள்ளது.

இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு கடந்த 9-ம் தேதி மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சில நாட்களில், குழந்தையின் உள்ளங்கால்களில் தானாகவே தீக்காயம் ஏற்பட்டது. இதனால் பயந்து போன பெற்றோர், குழந் தையை உடனடியாக மயிலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, குழந் தையை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தனி ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டுவரப்பட்டது. குழந்தைக்கு சிகிச்சை அளிக்க டீன் டாக்டர் குணசேகரன் தலைமையில் டாக்டர்கள் சத்தியமூர்த்தி, நிர்மலா, ராஜரத்தினம் ஆகியோர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் குழுவினர் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

டீன் விளக்கம்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனை டீன் குணசேகரன் கூறிய தாவது: உடலில் தானாக தீக்காயங் கள் ஏற்படும் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். குழந்தையின் உள்ளங்கால்கள், தொடை மற்றும் தொடையின் அடிப்பகுதியில் தீக்காயங்கள் உள்ளன. குழந்தை வந்து 2 நாட்கள் ஆகின்றன. மருத்துவமனைக்கு வந்த பிறகு வேறு எங்கும் தீக்காயம் ஏற்படவில்லை. குழந்தை யின் ரத்தம், சிறுநீர் உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்பட்டு வரு கின்றன. குழந்தைக்கு ஒரு மாதம் சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள் ளோம். 24 மணி நேரமும் குழந் தையை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க உள்ளோம்.

ஆண் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏன்?

ராஜேஸ்வரியின் 2 ஆண் குழந்தைகளின் உடலில் தீக்காயங்கள் ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து மருத்துவ ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

அடுத்தடுத்து குழந்தைகளின் உடலில் தீக்காயங் கள் ஏற்படுவதால் தாய் ராஜேஸ் வரி கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார். அவருக்கு மனநல ஆலோசனை கொடுக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

அதிசய நோய் இல்லை

2-வது குழந்தை ராகுலுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் நாராயணபாபு கூறும்போது, “திடீர் தீக்காயம் காரணமாக ராகுல் 2013 ஆகஸ்ட் மாதம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

டாக்டர்கள் குழுவின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குழந்தை குணமடைந்தான். அதன்பின் குழந்தையின் உடலில் தீக்காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அவனை 6 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து வந்து பரிசோதனை செய்துகொள்கின்றனர்.

குழந்தைக்கு 30-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனை முடிவுகள் அனைத்தும் சாதாரணமாகத்தான் உள்ளன. குழந்தைக்கு “ஸ்பொன்டேனியஸ் ஹியூமன் கம்பஷன்” என்ற உடலில் தானாக தீப்பற்றிக் கொள்ளும் அதிசய நோய் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x