Published : 21 Jan 2015 02:15 PM
Last Updated : 21 Jan 2015 02:15 PM

காவல் நிலையத்துக்குள் துப்பாக்கியால் சுட்டு பெண் காவலர் தற்கொலை

மதுரை மாவட்டம், சலுப்பபட்டி யைச் சேர்ந்தவர் பெத்தன்னசாமி. ராணுவ வீரர். இவரது மனைவி கருப்பாயி (30). நாகையாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள் இறந்துவிட்டன.

சில மாதங்களுக்கு முன் விடு முறையில் ஊருக்கு வந்த பெத்தன்னசாமி பணிக்குத் திரும் பாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந் ததை கருப்பாயி கண்டித்ததால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு காரணமாக கருப்பாயி மனஅழுத்தத்தில் இருந்துள்ளார்.

அதன்பின், கருப்பாயியை மட்டும் காவல்நிலைய பணிக்கு வைத்துவிட்டு, மற்ற போலீஸார் இரவு ரோந்துக்கு சென்றுவிட்டனர். நள்ளிரவு சுமார் 12.45 மணியளவில் காவல்நிலை எழுத்தரான சத்தியமூர்த்தியை தொடர்புகொண்ட கருப்பாயி, குடும்பப் பிரச்சினையால் தான் தற்கொலை செய்யப்போவதாகக் கூறிவிட்டு, செல்போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சத்தியமூர்த்தி சக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீஸார் உடனடியாக வந்து பார்த்தபோது, காவல் நிலையம் பூட்டப்பட்டு விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. போலீஸார் பூட்டை உடைத்துவிட்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கருப்பாயி சுவரில் சாய்ந்த நிலையில் இறந்துகிடந்தார். அவரது நெற்றி வழியாக தலையின் மேற்பகுதியில் துப்பாக்கி தோட்டா பாய்ந்திருந்தது. உடலுக்கு அருகே துப்பாக்கி கிடந்தது.

தகவல் அறிந்த எஸ்.பி. விஜயேந்திரபிதாரி மற்றும் போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் இதுபற்றி வழக்கு பதிந்து கருப்பாயியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மனைவி இறந்த தகவலை அறிந்த பெத்தன்னசாமி திருச்சி கன்டோண்மெண்ட் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கமாண்டோ பயிற்சி பெற்றவர்

காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘காவல்நிலையத்தில் பணிபுரியும் பிற அதிகாரிகள் பயன் படுத்தக்கூடிய துப்பாக்கிகள், இரவு நேரத்தில் அங்குள்ள ஆயுத அறையில் வைக்கப்பட்டிருக்கும். அதன் சாவி, பாரா காவலர் வசம் இருக்கும். தற்கொலை முடிவெடுத்த கருப்பாயி, தனது துப்பாக்கியை பயன்படுத்தாமல், ஆயுத அறையிலிருந்து .9 எம்எம் பிஸ்டல் ரக துப்பாக்கியை எடுத்து 2 தோட்டாக்களை நிரப்பி சுட்டுக்கொண்டார். மற்றொரு தோட்டா துப்பாக்கியிலேயே இருந்தது. எல்லா காவலர்களுக்கும் இந்த துப்பாக்கியை பயன்படுத்த தெரியாது. கருப்பாயி கமாண்டோ பயிற்சி பெற்றுள்ளதால் எளிதாகக் கையாண்டுள்ளார் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x