Published : 07 Jan 2015 09:38 AM
Last Updated : 07 Jan 2015 11:15 AM
ரயிலில் பெண் பயணிகளின் பாது காப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரயில்வே காவல்துறை செயல்படும் என்றார் திருச்சி ரயில்வே எஸ்.பி. ஆனி விஜயா.
வடக்கு - தெற்கில் விழுப்புரம் முதல் குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) வரையிலும், கிழக்கு - மேற்கில் காரைக்கால் முதல் பழநி வரையிலும் உள்ள ரயில்வே காவல் நிலையங்கள் திருச்சி ரயில்வே எஸ்.பி.கட்டுப்பாட்டில் உள்ளன.
திருச்சி ரயில்வே எஸ்.பி. யாக ஆனி விஜயா அண்மை யில் பொறுப்பேற்றார். அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகள் பாதுகாப்புப் பணியில் ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் ரயில்வே போலீஸாரும் இணைந்து 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர்.
விழாக் காலங்களிலும், மக்கள் அதிகமாக பயணிக்கும் நேரங்களிலும் (இரவு 10 மணி முதல் காலை 6 மணி) திருச்சி, விழுப்புரம் போன்ற பெரிய ரயில் நிலையங்களில் ஒரு உதவி ஆய்வாளர், இரு காவலர்கள் ஒவ்வொரு நடைமேடையிலும் பாதுகாப்புப் பணியில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் பயணி கள் காத்திருக்கும் அறைகள் மற்றும் நடைமேடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத் தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. பயணிகளுக்கு உதவ காவல் உதவி மையங்களும் உள்ளன.
ஓடும் ரயில்களில் பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் சிலர் சரிவர பணியை செய்யவில்லை என புகார்கள் வருகின்றன. இவை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். காவலர்கள் சட்டத்துக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். அதை மீறுவோருக்கு உரிய தண்டனை உண்டு. இதில் எவ்வித சமரசத்துக்கும் இடமளிக்க மாட்டோம்.
ஓடும் ரயிலில் தங்களுக்கு ஏதேனும் தொந்தரவுகள் இருப்ப தாக பயணிகள் உணர்ந்தால், அதுகுறித்து எனது செல்போன் (94454 63333) எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக காவலர்களை அனுப்பி உரிய தீர்வு காணப்படும். ரயிலில் பயணம் செய்யும்போது உடமைகள் காணாமல் போய்விட்டாலோ அல்லது சக பயணிகள் தொந்தர வுக்குள்ளானாலோ ஹெல்ப் லைன்: 99625 00500 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
பாதிக்கப்பட்டவர்கள், அந்த ரயில் நிலையத்தில் இறங்கித் தான் புகார் அளிக்க வேண் டும் என்பதில்லை. போலீஸாரே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார்களை பெற்றுக் கொண்டு சட்ட ரீதியான நடவடிக் கைகளை மேற்கொள்வார்கள்.
பெண்கள், கூட்டம் அதிகமாக இருக்கும்போது பெண்கள் பெட்டியில் பயணம் செய்யவும். அதில் ஆட்களே இல்லாதுபோது பொதுப் பெட்டிகளில் பயணம் செய்வதே நல்லது என்றார் ஆனி விஜயா.