

‘வேளாண் பல்லுயிர் பெருக்கமும், உலக வர்த்தக நிறுவனத்தின் 20 ஆண்டு கால செயல்பாடுகளும்’ என்ற தலைப்பிலான 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் நேற்று தொடங்கியது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடக்கும் இந்த கருத்தரங்கை தமிழக ஆளுநரும், சட்டப் பல்கலைக்கழக வேந்தருமான கே.ரோசய்யா தொடங்கிவைத்தார். இந் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “வேளாண் பல்லுயிர் பெருக் கத்தை மேம்படுத்துவதற்கு குறிப்பிட்ட வேளாண் பகுதிகளை உயிரி பாரம்பரிய பகுதிகளாக அறிவிக்க வேண்டும். பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்” என்றார்.
முன்னதாக, சட்டப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா சிரியர் பி.வணங்காமுடி வர வேற்றார். சுற்றுச்சூழல் சட்டத் துறை தலைவரும், கருத்தரங்க இயக்குநருமான டி.கோபால் அறிமுகவுரை ஆற்றினார். பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) துணைத்தலைவர் எச்.தேவ ராஜ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.