

இலங்கையில் நடைபெற்ற போரால் வெளிநாடுகளில் தஞ்ச மடைந்துள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை தாய்நாடு திரும்பச் செய்து எங்கள் பலத்தை அதிகரித்து அரசியல் அதிகாரம் பெறுவோம் என அந்நாட்டு எம்பி சீனித்தம்பி யோகேஸ்வரன் கூறினார்.
மதுரையில் இந்து இளைஞர் சேனா என்ற புதிய அமைப்பின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த அமைப்பை இலங்கை மட்டக்கிளப்பு மாவட் டத்தைச் சேர்ந்த தமிழர் தேசிய கூட்டமைப்புக் கட்சி எம்பி சீனித் தம்பி யோகேஸ்வரன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
இலங்கையில் இந்து மக்களின் உரிமைகளுக்காகப் பல்வேறு இந்து இயக்கங்களை நடத்தி வருவ தால் தமிழகத்தில் இந்த புதிய அமைப்பை தொடங்கி வைக் கிறேன். இலங்கையில் சிறிசேனா தலைமையிலான புதிய அரசும் 2009-ல் நடைபெற்ற போர் குறித்த சர்வதேச விசார ணையை விரும்பவில்லை. ஆனாலும் சர்வதேச விசாரணை நடத்த நாங்கள் தொடர்ந்து வலியு றுத்துவோம்.
தமிழருக்கு எதிரான கொடுங் கோல் ஆட்சி நடத்தியதால் ராஜ பக்சவை வீழ்த்த பொது வேட் பாளரான சிறிசேனாவுடன் இணைந்தோம். இதன் பயனாக பல மாற்றங்கள் ஏற்பட்டு வரு கின்றன. 1978-ம் ஆண்டுக்கு முந்தைய அதிகாரம் கொண்ட ஆட்சி முறை கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங் களில் ராஜபக்ச ஆட்சியில் ராணுவத்தில் பல்வேறு நிலை களில் பணியாற்றியவர்களே இங்கு முதல்வர் உள்ளிட்ட உயர் பொறுப்பில் இருந்தனர். இவர்கள் தமிழர்களுக்கு கொடுமை இழைத்ததுடன் கொலை, கொள்ளை, ஊழலில் ஈடுபட்ட னர். இவர்களை நீக்கிவிட்டு தற்போது ஆளுநர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
தமிழர் பகுதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, தமிழ் தேசிய கூட்டணியை ஆலோசித்த பின்னரே எந்த முடிவும் எடுக்கப் படும் என சிறிசேனா அரசு தெரிவித்துள்ளது. மறு குடியேற் றத்துக்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்திய-இலங்கை இடையேயான ஒப்பந்தத்தை நிறைவேற்ற காங்கிரஸ் ஆட்சி விரும்பியது. தற்போதைய பாஜக ஆட்சியில் ஒப்பந்தத்தை செயல்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் முழுமை யாகக் கிடைக்கச் செய்யும்வரை எங்களது முயற்சி தொடரும். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தமிழகம் உள்பட பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
ராஜபக்ச ஆட்சியின்போது இலங்கை திரும்பிய தமிழர்கள் மீது புலி ஆதரவாளர் என முத்திரை குத்தப்பட்டு பழிவாங்கப்பட்டனர். இதனால் வெளிநாட்டில் தஞ்ச மடைந்தவர்களை இலங்கைக்கு அழைக்க முடியாத நிலை நீடித்தது. தற்போது இந்த நிலை மாறிவிட்டதால், தமிழகம் உட்பட வெளிநாடுகளில் தஞ்ச மடைந்துள்ள அனைவரையும் இலங்கைக்கு திரும்ப அழைத்துச்செல்வோம். அப்போதுதான் குறைந்துவரும் எங்களுடைய பலத்தை அதிகரிக்கச் செய்வதுடன், உரிமைகளை மீட்கவும் பேருதவி யாக இருக்கும் என்றார்.