

தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட தைராய்டு அறுவை சிகிச்சையால் குரல்வளை பாதிக்கப்பட்ட பெண், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் நடத்தப்பட்ட அதிநவீன அறுவை சிகிச்சையால் குண மடைந்தார்.
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
படப்பையை சேர்ந்தவர் சாந்தி(54), இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அவரது குரல்வளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு குரல்வளை செயலிழந்தது. இதன் காரணமாக தொடர் மூச்சுத்திணறல், குரல் மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் சாந்தி பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சில வாரங்க ளுக்கு முன்பு சென்னை கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை துறை தலைவர் ரவி தலைமையிலான குழுவினர் அவருக்கு லேசர் சிகிச்சைக்கு இணையான கோபலேடர் என்னும் அதிநவீன கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்தனர்.
இந்த அறுவை சிகிச்சையின் மூலம் அவரது குரல்வளைக்கு இடையே உள்ள இடைவெளி அதிகரிக் கப்பட்டுள்ளது. இதனால் மூச்சு திணறல் கட்டுப்படுத்தப் பட்டதுடன், அவரால் பழைய குரலில் பேச முடிகிறது.
இந்த அறுவை சிகிச்சை அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.